Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vaikasi Matha Rasi Palan 2020 :வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்

வைகாசி மாதம் சூரியன் ரிஷபம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ரிஷபம் மாதத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி! பூமியில் படுத்துறங்குதல், பிரம்மச்சரியம், விழிப்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் வைகாசி மாதத்தின் "மாதவம்' என்றும் வடமொழி நூல்கள் கூறுகின்றன. ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய இம்மாதத்தில் குளிர்ந்த தண்ணீரில் நீராடல் பூரணத்வமானது என விஷ்ணு ஸ்மிருதி சிறப்பாகக் கூறுகிறது. சிறப்பான இந்த மாதத்தில் துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வைகாசி மாதம் சூரியன் ரிஷபம் ராசியில் புதனோடு சஞ்சரிக்கிறார். இந்த மாதம் சுக்கிரன் ரிஷபம் ராசியிலும் மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் சனி, குரு, கும்பம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் அனல் அடித்தாலும் வசந்த கால காற்று மனதில் உற்சாகத்தை தரும். வைகாசி மாதம் கிரகங்களின் ராசி மாற்றத்தை பார்த்தால் வைகாசி 1 ஆம் தேதி குரு வக்ர ஆரம்பமாகிறது. வைகாசி 11ஆம் தேதி ரிஷபம் ராசியில் இருந்து புதன் மிதுனம் ராசிக்கு சென்று ஆட்சி பெற்று அமர்கிறார்.

சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம். இந்த மாதத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாக இருங்க. இந்த மாதம் உங்களுக்கு பணவரவு வந்தாலும் செலவுகளால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். உடலில் உஷ்ணம் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படும். பண வரவில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். பேச்சில் நிதானமாக இருங்க. வியாபாரத்தில் லாபம் வரும். வேலையில் உற்சாகமும் நிம்மதியும் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு பணவரவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு திடீர் உதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள். போட்டிகளை முறியடித்து லாபம் வரும் என்றாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. இந்த மாதம் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யாதீங்க. திருமணம் பேச்சுவார்த்தைகள் சுப காரிய பேச்சுவார்த்தைகள் இந்த மாதம் எதுவும் வேண்டாம் ஒத்திப்போடுங்கள். தனியார் வேலையோ அரசு வேலையோ உங்களுக்கு இந்த மாதம் பதவி உயர்வு தேடி வரும் சந்தோஷத்தை அனுபவிக்க தயாராகுங்கள். அதே நேரத்தில் இந்த மாதம் அலைச்சல் அதிகரிக்கும்

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களின் முயற்சிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். பணம் பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். வேலை வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும் லாபம் அதிகரிக்கும் பணவரவு வரும். உங்களின் மனதில் நிம்மதி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு கவுரமான பதவி உயர்வுகள் தேடி வரும். சிலருக்கு இடமாற்றம் வரும். கொரோனா லாக் டவுன் காலம் முடிந்த உடன் பாதுகாப்பான இடத்திற்கு பயணம் செல்லுங்கள்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கணும். அதிகம் காரமான சூடான உணவுகளை சாப்பிடாதீங்க. தொழில் கூட்டாளிகள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்று பேசுவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இப்போது உள்ள லாக் டவுன் காலத்தில் தொழில் வியாபாரம் இப்படி முடங்கிப் போயிருக்கிறதே என்று கவலைப்படுகிறீர்கள் கவலை வேண்டாம், பிரச்சினைகள் தீரும். யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்காதீங்க. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினைகள் வராது.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்க நிதி நிலைமை நன்றாக இருக்கும். மூத்த சகோதரியின் உதவி கிடைக்கும். சொத்துக்கள் மூலம் விரைய செலவுகள் வரும். உங்க ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார் தொட்டதுக்கெல்லாம் மூக்கு மேல கோபம் வரும் கோபத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் நிதானமாக செயல்படுங்க. தேவையில்லாத அலைச்சல் டென்சன் வேண்டாம். நீங்க செய்யும் வேலைகளில் முயற்சிகளில் சில தடைகள் வந்து பின்னர் வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே காரசாரமான பேச்சுக்கள் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வீர்கள். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நிம்மதி ஏற்படும் சிலருக்கு பதவி உயர்வு வரலாம். சிலருக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். இந்த மாதம் உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மனதும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் கைகூடி வரும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். இந்த மாதம் நிலம் வீடு வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+