காதலர் தினம் ரோஸ் டே 2024.. சிகப்பு ரோஜா கொடுங்க.. காதல் நிச்சயம் சக்சஸ் ஆகுமாம்!
சென்னை: காதல் பூக்கும் தருணம் அற்புதமானது. கிரகங்களின் கூட்டணி காதல் கிரகங்களின் சேர்க்கை இளசுகளின் மனதில் காதல் மணி அடிக்க வைக்கும். காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிப்படுத்த ரோஜா பூக்களை வாங்கித்தருவார்கள். நாளை மறுநாள் 7ஆம் தேதி ரோஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. எந்த ரோஜாவை வாங்கிக்கொடுத்து காதல் துணையை அசத்தலாம் என்று பார்க்கலாம்.
பிப்ரவரி மாதம் காதல் மாதம். பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரைக்கும் தினம் தினம் திருவிழாதான். காதலர் தினத்தை கொண்டாடி தீர்ப்பார்கள். லவ் ஸ்டேட்டஸ்களை வைத்து இணைய உலகத்தை தெறிக்க விடுவார்கள் இளசுகள். காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.

காதலர் தினத்திற்காக உலகம் முழுவதிலும் பலகோடி ரோஜாப்பூக்கள் விற்பனையாகின்றன. காதலர் தினத்திற்கும் ரோஜாவிற்கும் என்ன தொடர்பு? என்று கேட்கலாம். உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். அது போலத்தான் ரோஜா பூக்களின் அழகில் மயங்காதவர்களும் இருக்கமாட்டார்கள்.
சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும் ரோஜாப்பூக்களின் அழகில் மயங்குவதும் காலம் காலமாக நடந்துக்கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இரண்டிற்குமே காரகர் சுக்கிர பகவான்தான். வண்ண வண்ணமாய் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் அள்ளித்தருவதால் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது , அன்பபை அறிவிப்பது வரை ரோஜாப்பூங்கொத்து அளிக்கப்படுகிறது.
குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரபகவானே தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். விழாக்கள் எதுவானாலும் மணம் மிக்க எழிலான ரோஜாப்பூங்கொத்து வழங்குவது நிறைவான வாழ்த்துகளாக திகழ்கிறது. விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிரன்.
மணம் வீசி மனம் கொள்ளைகொள்ளும் மயக்கும் ரோஜா சமையலிலும் இடம் பிடிக்கும் .கேக், புடிங், பானங்கள், ரோஸ் வாட்டர், எசன்ஸ், என மணக்கும் ..! மலர்களின் ராணியான ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. காதலின் சின்னமாக காதலர்களின் தேசிய மலராக உள்ளது ரோஜா.
ரோஜாவில் எத்தனையோ வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது. அப்புறம் என்ன இளசுகளே.. ரோஸ் டே கொண்டாடும் நாளில் எங்க இருந்தாலும் சிவப்பு ரோஜாவை அள்ளுங்க.. உங்கள் காதல் துணையிடம் கொடுத்து மனதில் நீங்காத இடம் பிடியுங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications