காதல் ஜோதிடம்.. நீங்க சிங்கிளா.. பிரேக் அப் ஆனவர்கள் மீண்டும் இணைய சிம்பிள் பரிகாரம்
சென்னை: காதலர் தினத்தை உலகமே கொண்டாடி வருகிறது. சிங்கிள் பசங்க எல்லாம் சோகத்தில் இருக்க காதலில் மிங்கிள் ஆனவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். யாருக்கெல்லாம் காதல் வரும்? காதல் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையில் செய்யும் மாற்றங்கள் எப்படி இருக்கும்? அமைதியான மனக்குளத்தில் காதல் என்ற கல் விழுந்து அலையை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
கண்கள் தூண்டில்: காதலா..காதலா..காதலின் சாரலா? என்று இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரையும் இந்த காதல் பாடாய் படுத்தும். கண்கள் என்ற தூண்டிலில் மீன்களாய் சிக்கிக்கொண்டாலும் அது இன்ப வேதனைதான். செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

காதல் வேட்கை: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
நரம்பு நாயகன் புதன்: மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.
நிலவும் காதலும்: அது போல நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டோ அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.
சனி, ராகு, கேது: சனி பகவான் பொதுவாக காதலில் சிக்கியவர்களுக்கு அவமானத்தையும், முறையற்ற காதலையும், தாமதத்தையும் தருவார். மதம் மாறிய, குலம் மாறிய வழக்கத்துக்கு மாறான அனைத்து திருமணங்களுக்கு காரகர் ராகு புதன் -ராகு காதல் தடை ஏற்படுத்தும். ஒரு தலைக்காதல். சட்டரீதியாக திருமணம், பதிவு திருமணம், காதல் உருவாக்குவது, உணர்ச்சி பூர்வமாக மாற்றும் கேது காரகர்.
காதலில் ஜெயிக்க பரிகாரம்: நமக்கு மட்டும் காதல் செட் ஆகவில்லையே என்று பலரும் கவலைப்படுவார்கள்.ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. பிரேக் அப் ஆனவர்களும், குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் தம்பதியினரும் வெள்ளிக்கிழமை சுக்கிரனை வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடுவார்கள். கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் அருகில் உள்ள மாங்காடு ஆகிய ஆலயங்கள் சுக்கிர பரிகார தலங்கலாகும். அருகில் இருக்கும் சிவ ஆலயங்களுக்கு சென்று நவகிரக சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். பிரேக் அப் ஆனவர்கள் கூட ஒன்று கூடுவார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications