Valentines Day Rasi Palan: காதலில் வெற்றி பெறும் அதிர்ஷ்ட ராசியினர் யார்?.. 12 ராசிகளுக்கான பலன்கள்
Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் எந்த ராசியினருக்கு எல்லாம் காதல் கைகூடும், காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக காதலை சொல்ல வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம்
சுக்கிரன் 11 ஆம் இடத்திலும், குரு 3 ஆம் இடத்திலும் இருப்பதால் காதலைச் சொல்ல சாதகமான காலகட்டமாக இருக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதலில் கண்டிப்பாக வெற்றி பெறும் யோகம் உண்டு.
ரிஷபம்
காதலில் கண்டிப்பாக வெற்றிக் கொடி கட்டும் யோகம் உண்டு. சுக்கிரன் 10 ஆம் இடத்திலும், குரு 2 ஆம் வீட்டிலும் இருப்பதால் காதல் கைகூடுவது மட்டுமல்லாமல் திருமணத்தில் முடியக்கூடிய அற்புதமான அமைப்பும் உள்ளது.
மிதுனம்
சந்திரன் 7 ஆம் வீட்டிலும், சுக்கிரன் 9 ஆம் வீட்டிலும் உள்ளனர். உங்களுக்கு இந்த நாள் மிகவும் சுமாரான நாளாகத் தான் காதல் விஷயத்தில் இருக்கும்.
கடகம்
கடக ராசியினரே உங்கள் ராசிக்கு 2 இல் கேதுவும், 8 இல் சுக்கிரன், ராகுவும் அமர்ந்துள்ளனர். காதல் கைகூடும் என்ற அதீத நம்பிக்கையில் தேவையில்லாதவற்றை காதல் விஷயத்தில் செய்து சொதப்புவதற்கான வாய்ப்புள்ளதால் காதல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. 7 ஆம் இடத்தில் ராகு சுக்கிரன் அமர்ந்திருக்கின்றனர். ராசிக்குள் கேது பகவான் இருக்கிறார். காதல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
கன்னி
கன்னிக்கு காதல் விஷயத்தில் சாதகமான நாளாக இல்லை. 7 இல் சனி, 6 இல் சுக்கிரன், ராகு இருப்பதால் காதல் விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு காதல் விஷயத்தில் ஜாக்பாட் அடிக்கும் யோகம் உண்டு . செவ்வாய் உச்சமாக இருப்பதால் காதல், திருமணம் போன்ற விஷயங்கள் கைகூடும். சந்திர பகவான் 3 இல் இருப்பதால் தைரியமாக காதலை சொல்வீர்கள். உங்கள் காதலுக்கு கிரீன் சிக்னலும் கட்டாயம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரே காதல் விஷயத்தை கனவிலும் நினைக்காமல் இருப்பது நல்லது. ஆறு மாதத்திற்குப் பொறுமை காப்பது அவசியம். குரு சாதகமில்லாமல் இருப்பதால் தேவையில்லாமல் வார்த்தைகளால் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
தனுசு
தனுசு ராசியினரே 7 ஆம் இடத்தில் குரு, 3 ஆம் இடத்தில் சுக்கிரன் ராகு இருப்பதால் காதலை தைரியமாக சொல்லி சம்மதத்தைப் பெறுவீர்கல். திருமண யோகமும் உண்டு என்பதால் மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டம்.
மகரம்
மகர ராசியினருக்கு ஜூன் மாதத்திற்குப் பிறகே திருமணம் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவதில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்
கும்ப ராசிக்குள்ளேயே சுக்கிரன் இருப்பதால் ஒரே லவ் மூடிலேயே இருப்பீர்கள். குரு 5 ஆம் இடத்தில் சாதகமாக இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். இப்போது காதலைச் சொன்னால், ஓரளவு சாதகமான பதில்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மீனம்
காதல் விஷயத்தில் ரிஸ்குகளை எடுக்காமல் இருப்பது நல்லது. சில மாதங்கள் காதல் விஷயத்தை தள்ளிப்போடுவது நல்லது. வேலை, படிப்பில் கவனம் செலுத்துவது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications