காதலர் தினம்: காதலில் சொதப்பப் போகும் 6 ராசியினர்?.. இப்ப புரொபோஸ் பண்ணினா போச்சு.. ரொம்ப கவனம்
Valentines Day Rasi Palan: உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் [Valentines' day Rasi palan].
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மனிதராக ஏற்றுக் கொள்வதும், சமமாக மதிப்பதும் தான் உண்மையான காதலின் அடிப்படை. ஜாதி, மதம், இனம், பணம், அதிகாரம் ஆகியவற்றைப் பார்த்து வருவது காதல் அல்ல. அந்தப் புனிதமான காதல் எல்லோருக்கும் கைகூடுமா என்றால் கண்டிப்பாக இல்லை.

அப்படியே கைகூடினாலும் அது திருமணத்தில் முடியுமா என்றால் பலருக்கும் அப்படியில்லை. காதல், திருமணம் போன்றவற்றுக்கு கிரக நிலைகளும் காரணம் என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள். அந்த வகையில், உலகெங்கிலும் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலை சொல்வதில் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும், காதலில் சொத்தப்பப் போகும் ராசியினர் யார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்
கடகம்
கடக ராசியினரே உங்கள் ராசிக்கு 2 இல் கேதுவும், 8 இல் சுக்கிரன், ராகுவும் அமர்ந்துள்ளனர். காதல் கைகூடும் என்ற அதீத நம்பிக்கையில் தேவையில்லாதவற்றை காதல் விஷயத்தில் செய்து சொதப்புவதற்கான வாய்ப்புள்ளதால் காதல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. 7 ஆம் இடத்தில் ராகு சுக்கிரன் அமர்ந்திருக்கின்றனர். ராசிக்குள் கேது பகவான் இருக்கிறார். காதல் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
கன்னி
கன்னிக்கு காதல் விஷயத்தில் சாதகமான நாளாக இல்லை. 7 இல் சனி, 6 இல் சுக்கிரன், ராகு இருப்பதால் காதல் விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினரே காதல் விஷயத்தை கனவிலும் நினைக்காமல் இருப்பது நல்லது. ஆறு மாதத்திற்குப் பொறுமை காப்பது அவசியம். குரு சாதகமில்லாமல் இருப்பதால் தேவையில்லாமல் வார்த்தைகளால் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
மகரம்
மகர ராசியினருக்கு ஜூன் மாதத்திற்குப் பிறகே திருமணம் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவதில் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்
காதல் விஷயத்தில் ரிஸ்குகளை எடுக்காமல் இருப்பது நல்லது. சில மாதங்கள் காதல் விஷயத்தை தள்ளிப்போடுவது நல்லது. வேலை, படிப்பில் கவனம் செலுத்துவது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications