காதல் ஜோதிடம்... பூட்டுக்கு ஏற்ற சாவி.. சரியான ஜோடி யார்? காதலில் வெற்றி பெரும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஆணோ பெண்ணோ இருவரின் ஜாதகத்தையும் அலசி ஆராய்வது அவசியம். கிரகங்களின் அமைப்பு, கூட்டணி என்பதைப் பார்த்துதான் ஜோடி சேர்க்க வேண்டும். மேஷம், ரிஷபம்,மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம், தனுசு. மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.
மனப்பொருத்தம்: திருமணத்திற்கு வரன் பார்க்கும் போதே ஜாதகத்தை அலசி ஆராய்வது அவசியம் குடும்பம் நடத்த இவர் சரிப்பட்டு வருவாரா? ரொமான்டிக்கான ஆளா? அல்லது மூடி டைப்பா? தாம்பத்ய வாழ்க்கை எப்படி என்பதைக்கூட ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஆணோ பெண்ணோ இருவரின் ஜாதகத்தையும் அலசி ஆராய்வது அவசியம். கிரகங்களின் அமைப்பு, கூட்டணி என்பதைப் பார்த்துதான் ஜோடி சேர்க்க வேண்டும்.

கிரகங்கள் கூட்டணி: நவ கிரகங்கள் மனதையும் உடலையும் ஆள்கின்றன. புத்தியும் மனமும் சில நேரங்களில் நவகிரகங்களின் கட்டுப்பாட்டிற்குள் போய்விடுகின்றன என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். எனவேதான் உடல்நிலையோ மனநிலையோ சரியில்லை என்றால் ஜாதகத்தை கையில் எடுக்கிறோம். சில தம்பதிகள் பாதியிலேயே பிரிய காரணம் கணவன் மனைவி இடையே ஒத்துபோகாமல் ஒருவித புரிதல் இல்லாமல் போவதுதான்.
சரியான ஜோடி: திருமணம் என்பது இரு மனங்கள் இணையக்கூடிய நிகழ்வுதான். சிலருடைய திருமண வாழ்க்கை மட்டுமே வெற்றிகரமானதாக இருக்கிறது. பலரது வாழ்க்கை சண்டை சச்சரவு என தினம் தினம் போர்க்களமாகவே இருக்கிறது. கல்யாண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனில் சரியான ராசி பார்த்து ஜோடி சேர வேண்டும். எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான மன வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.
ராசிகள்: நெருப்பு ராசிகள், நீர் ராசிகள், காற்று ராசிகள், நில ராசிகள் என நான்கு வகை தத்துவத்தில் ராசிகள் இருக்கின்றன. இந்த ராசிகள் சரியான ராசி பார்த்து இணைய வேண்டும். சரியான ராசியோடு ஜோடி சேராவிட்டால் திருமண வாழ்க்கையில் சண்டைகள் அதிகரிக்கும் அந்த மண வாழ்க்கை பிரிவு வரை கொண்ட போய் விட்டு விடும்.
மேஷம் - கடகம்:மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பு ராசிக்காரர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள்.
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் மனோகாரகன். நெருப்பான மேஷ ராசியினரை கடக ராசியினர் திருமணம் செய்து கொண்டால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவார்களாம்.
மேஷம் - கும்பம்: மேஷ ராசி அதிபதி செவ்வாய். ரத்தத்தின் அதிபதி எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும் இவர்கள் போர் குணம் கொண்டவர்கள். உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். காதலில் வெற்றி பெற தைரியமும் சுறுசுறுப்பும் அவசியம். கும்ப ராசியின் அதிபதி சனிபகவான். பொறுமைசாலிகள். ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் இணைந்தால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.
ரிஷபம் - விருச்சிகம்: காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
ரிஷபம் - மகரம்: ரிஷப ராசி அதிபதி சுக்கிரன், மகர ராசி அதிபதி சனி. சுக்கிரனும் சனியும் நட்பானவர்கள் நில ராசிக்காரர்கள் இருவரின் குணாதிசயங்களும் ஒன்றாக இருப்பதால் காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி இருவரிடையே நம்பிக்கையும், புரிதலும் இருக்கும் கல்யாண வாழ்க்கை ருசிக்கும்.
மிதுனம் - துலாம்: மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான். கல்வி, ஞானம், தனம் ஆகியவற்றை தரக் கூடியவர். மிதுன ராசியினர் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து நடக்கக் கூடிய மன நிலையைக் கொண்டிருப்பார்கள். துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி துலாம் ராசியினர் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாதானத்தை விரும்பக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் திருமணத்தில் இணைவதால் வெற்றிகரமான மண வாழ்க்கையாக அமையும்.
சிம்மம் - துலாம்:சிம்ம ராசிக்கான அதிபதி சூரியன். நெருப்பு ராசியான சிம்மத்தில் பிறந்தவர்கள் ஆளுமை மிக்கவர்கள். தன்னம்பிக்கையும், ஆதிக்கமும் செலுத்தக்கூடியவர்கள். துலாம் ராசியினர் காற்று ராசிக்காரர்கள். சமாதானத்தை விரும்புபவர். காதலை விரும்புபவர்கள். இந்த இரண்டு ராசிகள் இணைந்தால் மனம் ஒத்த தம்பதிகளாக ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவார்கள்.
மிதுனம் - கடகம்: புதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும்.
கன்னி - விருச்சிகம்: கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நில ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும்.
மீனம் - கடகம்: மீன ராசி அதிபதி குரு. கடக ராசி அதிபதி சந்திரன். இந்த இரண்டு ராசிகளும் நீர் ராசிகள். இதனால் இரு ராசிகளிடம் ஒத்த குணங்கள் அதிகம் இருப்பதால் காதல், அன்பு என எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக ஒத்துப்போகும். திருமணம் செய்து கொண்டால் ஒற்றுமையாக இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications