அள்ளித்தரப்போகும் வரலட்சுமி.. கோடீஸ்வர யோகமும் அஷ்ட லட்சுமி யோகமும் உங்க ஜாதகத்தில் இருக்கா?
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார். வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படும் இந்த நாளில் மகாலட்சுமியின் அருளும் சுக்கிரன் அருளும் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். ஜாதகத்தில் அஷ்ட லட்சுமி யோக அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
வரம் தரும் மகாலட்சுமி யோகம்: ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் அன்னை மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் மகாலட்சுமிதான். லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் அருள் இருக்கும். எனவேதான் மகாலட்சுமிக்கு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார் மகா விஷ்ணு. மகாலட்சுமி யோகம் உங்க ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் இருந்தாலும் உங்கள் இல்லத்திலும் செல்ல வளம் பெருகும்.

அஷ்ட லட்சுமி யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டலட்சுமி யோகம் இருந்தால் அவர் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்வார். லட்சுமி யோகத்தை ஜனன ஜாதகத்தில் பெற்ற ஒருவர் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார். ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு என்கின்றனர் ஜோதிடர்கள். இப்போது கோச்சார ரீதியாக மேஷ ராசியில் ராகுவும் குருவும் இணைந்திருக்கின்றனர். இந்த அமைப்பு இருக்கும் ஜாதகர்களுக்கும் கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
மகாலட்சுமி யோகம்: செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்றிருந்தால் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லட்சுமி யோகத்தை தரும். ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும்.
திடீர் பண வருமானம்: ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் பிரகஸ்பதி எனப்படும் தேவகுரு வியாழனும், அசுர குரு எனப்படும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் திடீர் பணவரவால் செல்வந்தர் ஆவார். கடக ராசியில் குரு உச்சமடைகிறார். சுப குருவான குரு, சந்திரன் உடன் இணைந்து கடக ராசியில் இருந்தால் நாடாளும் யோகம் அமையும். சந்திரன், புதன் கன்னி ராசியில் இணைந்து இருந்தால் தனதான்ய சம்பத்து கிடைக்கும்.
அதிர்ஷ்ட லட்சுமி யோக அமைப்பு: ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னம், நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது ஐந்து, ஒன்பது. சில நூல்களில் லக்னம் கேந்திரத்தில் இருக்கும், த்ரிகோணத்திலும் இருக்கும். கேந்திரங்களுக்குரிய கிரகங்களும், த்ரிகோணத்திற்குரிய கிரகங்களும் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்றால் லட்சுமி யோகம் அமையும்.
தர்மகர்மாதி யோகம்: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பத்தாம் அதிபதி இதில் யாராவது ஒருவர் பார்ப்பது சுபமங்கள யோகமாகும். தர்ம கர்மாதிபதிகள் எனப்படும் 9, 10க்குடையாளர்களுடன் லாபாதிபதி எனும் 11ஆம் அதிபதி சம்பந்தப்பட்டால் சுய சம்பாத்தியத்தின் மூலம் பெரும் தனம் சேரும். தர்ம ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள் அமைக்கும் பாக்கியம் உண்டு. லக்னத்திற்கு 9, 10க்குரியவர்கள் அல்லது சந்திரனுக்கு 9, 10க்குரியவர்கள் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் பூமி, பொன், பொருள் உண்டு.
செல்வம் குவியும் யோகம்: சந்திரனுக்கு கேந்திரமான 7ஆம் இடத்தில் சம சப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது சவுந்தர்ய யோகம், வசிய யோகம். பெண்கள் மூலம் பண வரவு கிடைக்கும். 3, 6, 8, 12க்குரியவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெற்றாலும், 6க்குடையவன் 12ல், 12க்குடையவன் 6ல் இருந்தாலும், 12ஆம் அதிபதி. 12ல் இருந்தாலும் விமல யோகம். கணக்கிட முடியாத செல்வ வளங்கள் வந்து சேரும். பிறந்த ஜாதகத்தில் லக்னம், நான்கு, எட்டில் சூரியனும், புதனும் சேர்ந்து இருப்பது ராஜயோக அமைப்பாகும். கல்வியில் புகழ் அடைவார்கள், கணக்கு துறையில் சாதனை படைப்பார்கள். லக்னத்திற்கு 10ஆம் இடத்தில் சந்திரன், சனி சேர்ந்து இருந்தால் ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாக இருப்பார்.
வீடு வாகனம் வாங்கும் யோகம்: ஜாதகத்தில் நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், வாகனம், கால்நடைகள், தாயார், வீடு நிலம், சொத்துக்களை பற்றி பேசும் இடம். வளர்பிறை சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து ஒருவநான்காம் இடத்தில் இருந்தால் ரியல் எஸ்டேட், செங்கல், மணல், கட்டிட கட்டுமான பணிகள், விவசாய வருமானம் என பூமி மூலம் லாபம் அடைவார்கள். நான்காம் இடத்தில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தப்பட்டால் சொத்து சுகம் அதிகம் இருக்கும். தாய் மூலம் சொத்து சேரும். விவசாய விளைநிலங்கள், வீட்டு வாடகை, ஹோட்டல், லாட்ஜ், தங்கும் விடுதி போன்றவற்றில் அதிக வருமானம் பெறுவார்கள்.
கோடீஸ்வர யோகம்: குருவும், கேதுவும் இணைந்து ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவர் பாக்கியசாலியாக திகழ்வார். ரிஷப லக்னத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் வீடான கன்னி ராசியில் குருவும், கேதுவும் இருந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வரன் ஆவது உறுதி. அந்த யோகம் உள்ள ஜாதகதாரர் 45 வயதுக்கு மேல் பெரிய பதவி வகித்து உயர்வடைவார். இன்றைய சூழ்நிலையில் தனுசு ராசியில் கேது சனி இணைந்திருக்க கூடவே குருவும் கூட்டணி அமைத்துள்ளார். இந்த அமைப்பு இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் யோகக் காரர்களே.
வெள்ளிக்கிழமை: நவ கிரகங்களில் சுக்கிர பகவான் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்த சகோதரன் முறை எப்படி தெரியுமா? பிருகு மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர்தான் இந்த சுக்கிரன். அதனால் மகாலட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் உள்ளது போல சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயருண்டு. ஒரே தாய் தந்தையருக்கு இவர்கள் இருவரும் அவதரித்ததால் சகோதரன் சகோதரி முறை வருகிறது. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்ற வீட்டில் அஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும்.
லட்சுமி, சுக்கிரன் அருள் பெறும் ராசிகள்: பொதுவாக ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் அருள் கிடைக்கும். காரணம் இந்த ராசிகளின் அதிபதிகள் சுக்கிரன். அதே போல சந்திரன் அதிபதியான கடக ராசிக்காரர்களுக்கு அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களுக்கு தைரிய லட்சுமியின் அருளினால் செல்வம் தேடி வரும். மேஷம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் ஆசியாலும் மகாலட்சுமியின் அருளினாலும் பண வருமானம் அதிகரித்துக்கொண்டே இருக்குமாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications