வசந்த பஞ்சமி யோகம்: இந்த 5 ராசியினருக்கு அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி பெருகும்.. உங்க ராசி இருக்கா?

Subscribe to Oneindia Tamil

வசந்த பஞ்சமி: பிப்ரவரி மாதத்தில் சுக்கிரன், புதன், சனி, வியாழன், சூரியன் கிரகங்களின் மாற்றத்தால் 5 ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த ராசியினர் அதிர்ஷ்டம் பெறப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை வணங்கும் நாளே வசந்த பஞ்சமி. வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தின் சனி பகவான் தன்னுடைய இயக்கத்தை மாற்றுவதால் அனைத்து கிரகங்கள் மீதும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். இந்த வசந்த பஞ்சமி நாளில் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உருவாகப் போகிறது.

lucky zodiac signs

சுக்கிரன், புதன், சனி, வியாழன், சூரியன் ஆகிய 5 கிரகங்களும் 5 ராசியினருக்கு நல்ல பலனை அள்ளித் தரப் போகின்றனர். எடுத்த காரியங்களில் வெற்றி, பணம் சார்ந்த விஷயங்கள், கல்வி, வியாபாரம், தொழில், குடும்பத்தில் அமைதி போன்ற பல்வேறு மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அனுபவிக்கப் போகின்றனர்.

ஜனவரி 30ஆம் தேதி காலை 07:12 மணிக்கு வெள்ளி மீனத்தில் நுழையும், அதே நேரத்தில் வியாழன் ஜனவரி 30 ஆம் தேதி இரவு 10:09 மணிக்கு கும்பத்தில் நுழைகிறார். ஜனவரி 31 ஆம் தேதி அதிகாலை 04:26 மணிக்கு, சூரியனும் வியாழனும் 120 டிகிரியில் நவபஞ்சம் யோகத்தை உருவாக்குகின்றன. பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 08:37 மணிக்கு சுக்கிரன் உத்திரபாத்ரபாதத்தில் நுழைந்து போக்கை மாற்றுகிறார். எந்தெந்த ராசியினர் செல்வம் செழிப்பு, வெற்றியைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: வசந்த பஞ்சமி யோகத்தால் உங்களுடைய பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய செல்வத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிதி சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதார நிலை வலுப்பெறும். பகுத்தறியும் திறன், புத்திக்கூர்மை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சனி பகவான் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவார். உங்களுடைய கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். சூரிய பகவானின் அருளால் உங்களுடைய தலைமைத்துவ திறனை மேம்படுத்துவதற்கான சூழல் உருவாகும். வியாழன் கிரகத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செல்வ செழிப்பு, வெற்றி, லாபத்தைக் காணும் காலகட்டமாக உங்களுக்கு அமையும்.

சிம்மம்: வசந்த பஞ்சமி யோகம் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டமான பலன்களைத் தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வரும். சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும். கல்வி, தகவல் தொடர்புத் திறனில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய நீண்டகால முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தன்னம்பிக்கையுடன செயல்படும் காலமாக இருக்கும். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதிய செல்வ வளம் பெருகும். பதவி உயர்வு, சம்பள உய்ரவு, சமுதாயத்தில் மதிப்பு மரியாதை போன்ற பலன்கள் கிடைக்கும்.

துலாம்: உங்களுடைய காதல் உறவுகள் வலுப்படும். சுக்கிரனின் அருளால் நல்ல சாதகமான மாற்றத்தை காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்படும். வியாபாரம், தொழிலில் லாபத்தைக் காண்பீர்கள். உங்களுடைய கடமைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்க சனி பகவான் துணை இருப்பார். புதிய வேலை, தொழில் வாய்ப்புகள் வரும். ஆன்மிகம் சார்ந்த அறிவு, பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். திருமணம் மற்றும் உறவுகளில் நிலைத் தன்மை ஏற்படும். வாழ்க்கை முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படும். பொருளாதார சூழ்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் யோகம் உண்டு.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு கனவுகள் நிறைவேறும் காலமாக இருக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டு பயணம் நல்ல பலனைத் தரும். புதன் கிரகம் நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தருவார். சேமிப்பு முதலீடுகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். சனி பகவான் உங்கள் கடின உழைப்புக்கான பலனைத் தருவார். நீண்டகாலமாக முடிக்கப்படாத வேலைகளை திட்டமிட்டு முடிப்பீர்கள். சூரிய பகவானின் அருளால் நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றியைத் தரும் காலமாக இருக்கும். வியாழன் கிரகம் குடும்பத்தில் அமைதியை உண்டாக்கும். லாபத்தைப் பெறுவீர்கள். எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெறும். சமுதாயத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: கலைத் துறையில் இருக்கும் மீன ராசியினருக்கு நல்ல காலமாக இருக்கும். படைப்பாற்றலை மேம்படுத்தும். உறவுகளுக்குள் இனிமையான காலமாக இருக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகன்று தெளிவு பெறுவீர்கள். சனி பகவானின் அருளால் தொழில், வியாபாரத்தில் நிலைத் தன்மையைப் பெறுவீர்கள். சூரிய பகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக்கச் செய்வார். உறவுகள் வலுப்படும். வியாழன் கிரகம் உங்களுக்கு செல்வசெழிப்பு, மகிழ்ச்சி, அமைதியைத் தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் நேர்மறையான நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+