மீன ராசியில் சுக்கிரன்: வாழ்வில் பிரகாசிக்கப் போகும் 4 ராசியினர்.. உங்க ராசி லிஸ்ட்ல இருக்கா பாருங்க
சுக்கிரன் பெயர்ச்சி: மீன ராசியில் சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி தற்போது உச்சத்தில் இருக்கிறார். சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. என்னவிதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வரும் பிப்ரவரி மாதம் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. புதன் மற்றும் சூரியன் கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. தற்போது மகர ராசியில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 ஆம் தேதி கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி மீன ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். சூரிய பகவான் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசியில் பயணத்தை தொடங்கவுள்ளார்.

குரு பகவான் ரிஷப ராசியிலும், செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையிலும், கேது கன்னி ராசியிலும், கும்பத்தில் சனி பகவானும், சுக்கிரன் மீன ராசியில் உச்ச நிலையில் உள்ளார். அதேபோல ராகுவும் மீனத்திலும் உள்ளார். இந்த கிரக நிலையில் தான் ராசி பலன்கள் இருக்கப் போகின்றன. சந்திர பகவான் சதய நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி மீண்டும் சதய நட்சத்திரத்திற்குள் வந்து பூராட்டாதி நட்சத்திரத்தில் தன்னுடைய பெயர்ச்சியை இந்த மாதத்தில் முடிக்கிறார்.
இந்த மாதத்தின் கிரக நிலையைப் பார்க்கும்போது ரிஷபத்தில் குரு பகவான், செவ்வாய் வக்கிர நிலை, கன்னியில் கேது பகவான், மகர ராசியில் புதாதித்ய யோகம், கும்பத்தில் சனி பகவான் மூல திரிகோண ஸ்தானம், மீனத்தில் சுக்கிர பகவான் உச்ச நிலையில் இருக்கிறார்.
சுக்கிரனின் இந்த இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணம், செல்வம், அதிர்ஷ்டம், நல்ல நேரம் என்ற அனைத்து விதமான நற்பலன்களும் அமையப் போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டங்களை 4 ராசிக்காரர்கள் அனுபவிக்கப் போகின்றனர். சுக்கிரன் மாற்றத்தால் இந்த ராசியினருக்கு அற்புதமான பலன்கள் காத்திருக்கின்றன. சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத விதமான பண வரவு, லாபம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தனி இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி செயல்படுவீர்கள். செய்யும் செயல்கள் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய வீடுகள் வாங்குவதற்கான முயற்சிகள் உங்களுக்கு கைகூடும்.
ரிஷபம்: சுக்கிரனின் இடப்பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும். உங்களுக்கென்று ஒரு பாதையை வகுத்து அதில் நேர்மையாக செல்ல முயற்சி செய்வது நல்லது. உங்களுடைய நேர்மை நல்ல பலன்களைத் தரும். நிதி நிலை சார்ந்த பிரச்னைகள் தீரும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சியை எடுப்பது நற்பலன்கலைத தரும். கடின உழைப்பு உங்களுக்கு ஏற்றத்தை தரும்.
சிம்மம்: சுக்கிரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். நிதி சார்ந்த அனைத்தும் பிரச்சனைகளும் உங்களுக்கு விலகும். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பண வரவு அதிகரிக்கும். வேலைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்: சுக்கிரப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு சமூகத்திலிருந்து மரியாதை அதிகரிக்கும். மேலும் குடும்பங்களில் நல்ல மகிழ்ச்சி பெருகும். நல்ல நேர்மையான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை பெருகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications