கலாத்மக ராஜயோகம்: லாபத்தை அள்ளப் போகும் ராசிகள்?.. பண மழை கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

கலாத்மக யோகம்: சுக்கிரனும், சந்திரனும் மீன ராசியில் இணைவதால் கலாத்மக ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் எந்தெந்த ராசிக்காரர்கள் அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

2025 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடக்கப் போகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் பல பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், கிரக மாற்றங்கள் இந்த புத்தாண்டில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கப் போகின்றன.

astrology rasi palan

சுக்கிர பகவான் மற்றும் சந்திர பகவானின் கிரக மாற்றத்தால் கலாத்மக ராஜயோகம் உண்டாகப் போகிறது. 2025 ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீனத்தில் பயணம் செய்யவுள்ளார். 2025 பிப்ரவரி 1 ஆம் தேதி சந்திரன் கிரகம் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடமாற்றம் செய்யவுள்ளார். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணையும்போது அனைத்து ராசிகளும் பல்வேறு பலன்களை அடையும்.

அந்த வகையில், மீன ராசியில் சுக்கிரனும் சந்திரனும் இணையும்போது உருவாகும் கலாத்மக ராஜயோகத்தால் நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீனம்: மீன ராசியில் இணையும் சந்திரன் மற்றும் சுக்கிரனால் உருவாகும் கலாத்மக ராஜயோகத்தால் மீன ராசியினர் பல்வேறு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதனால், மற்றவர்களைவிட தனித்து காணப்படுவீர்கள். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பல்வேறு வேலைகளை செய்து முடிக்கும் வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலாத்மக யோகம் சிறப்பான பலன்களைக் கொடுக்க போகிறது. உங்களுடைய ராசியில் ஐந்தாவது வீட்டில் இந்த இணைப்பு உருவாகுவதால் குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரம், தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்ல வருமானத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். திடீர் பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எந்த காரியங்களை எடுத்தாலும், அதில் வெற்றியைக் காண்பீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+