Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி வச்சு செய்யப் போகுது.. மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிர பகவான் மே மாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சுக்கிரனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் சவால்கள் ஏற்படக்கூடும். எந்தெந்த ராசியினர் பிரச்சனையை சந்திக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

செல்வம், செழிப்பு, புகழ், வசதி, வசியம், காதல் போன்ற அனைத்து விதமான செல்வங்களுக்கும் அதிபதியானவர் சுக்கிர பகவான். சுப கிரகமான சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அதிர்ஷ்டமான பலன்களை அனுபவிப்பார்கள். சுக்கிரன் கிரகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன் நட்சத்திரத்தையும் கடந்து செல்வார். இந்த மாற்றம் சிலருக்கு சுப பலன்களையும், அசுப பலன்களையும் அளிக்கும்.

sukiran peyarchi rasi palan

சுக்கிரனின் ராசி மாற்றம் மற்றும் இயக்கத்தில் நிகழும் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த ஆண்டில் சுக்கிர பகவான் வரும் மே 31 ஆம் தேதி தனது ராசியை மாற்றுகிறார். இந்த ராசி மாற்றம் காலை 11:42 மணிக்கு நடைபெறுகிறது. சுக்கிரன் மேஷ ராசியில் நுழைவார்.

மே மாதத்தில் சுக்கிரன் ராசி மாற்றத்தால் 12 ராசிகளில் 3 ராசிகள் வித்தியாசமான சவால்களை சந்திக்க நேரிடும். இந்த ராசி மாற்றத்தால் பிரச்சனைகள் மற்றும் சவால்களை சந்திக்கப் போகும் ராசியினர் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம் (Sukira peyarchi palan for rishbam): சுக்கிரனின் ராசி மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை நிதானமாக யோசித்து எடுப்பது நல்லது. உங்கள் துணையின் மீதான நம்பிக்கை குறையும். அதனால் விரிசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரம் தொழில் செய்பவர்கள் கோபம் காரணமாக சில தவறான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புள்ளது. இதனால் வரும் காலங்களில் வருத்தத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.

கும்பம் (Sukira peyarchi palan for Kumbam): கும்ப ராசிக்காரர்கள் ஏமாற்றங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால், பணத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடன்கள் வாங்காமல் இருப்பது நல்லது. அப்படியே கடன் வாங்கினாலும் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுவீர்கள். மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய் தந்தையுடன் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தனுசு (Sukira peyarchi palan for Dhanusu): சுக்கிரன் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு மே 31 ஆம் தேதி வரை நன்றாக இருக்காது. திருமணம் ஆனவர்களுக்கு மனதில் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். யாரோ ஒருவரிடமாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பீர்கள். காதலில் முறிவு ஏற்பட்டவரக்ளுக்கு தனிமையை உணர்வார்கள். மன அழுத்தத்தாலும், மன சோர்வாலும் பாதிக்கப்படுவீர்கள். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் லாபம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு மற்றும் சொத்துகள் வாங்கும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+