விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. செவ்வாயின் அருளால் இனி நீங்க தொட்டதெல்லாம் தங்கமாகும்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் விருச்சிகம் ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூப்பரான மாதமாக இந்த ஆவணி மாதம் இருக்கும். இந்த மாதத்தில் பெரும்பகுதியான நாட்களில் 11 ஆம் இடத்திலேயே ராசிநாதன் அமர்ந்திருக்கிறார். 6 மாதத்துக்கு முன்பு நீச்சம் போன்ற நிலைமைகளில் பல்வேறு பாதிப்புகளைத் தந்து வந்த கிரகங்கள் எல்லாம் படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு இருந்த மனக்கஷ்டம் உங்களுக்கு இப்போது இருக்காது. அந்த சமயங்களில் ராசிநாதன் பலவீனமாக இருந்தார்.
தொட்டது துலங்கும்
ராசிநாதன் 11 ஆம் இடத்தில் பலமாக இருப்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும் மாதமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் ராசிநாதன் இருப்பது மிகப்பெரிய விசேஷம். 8 இல் குரு மறைந்திருக்கிறார். ஆனால், அவருடைய 2 ஆம் வீட்டையே குரு பார்ப்பதால் எதிர்பாராத விஷயங்களில் உங்களுக்குப் பண வரவு உண்டாகும்.
தாயால் செலவு
4 இல் ராகு இருக்கிறார். அம்மாவால் செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அம்மாவிடம் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலில் கொஞ்சம் அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு பின்னர் இணக்கமாகச் செல்வீர்கள். தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு தாய் சார்ந்த கவலைகள் ஏற்படும். ஆனால், 4 இல் இருக்கும் ராகுவுக்கு குருவின் பார்வையும் இருப்பதால் பெரிய சாதகமற்ற தன்மைகள் கிடையாது.
திருமண யோகம்
சிலருக்கு திருமண அமைப்புகள் கைகூடி வரும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாம் திருமணம் என்பதில் மிகுந்த பயத்துடன் இருப்பீர்கள். வாழ்க்கையைப் பற்றி எதிர்பார்ப்பில் மிகுந்த பயத்துடன் இருப்பவர்களுக்கு, அந்த கவலையே வேண்டாம். இரண்டாம் திருமணம், தொழில் துறை என அனைத்தும் நல்லபடியாக இருக்கும். எல்லாவற்றையும் தைரியமாக செய்யலாம் என்கிற மனபலம் அதிகரிக்கும்.
கடன், நோய் விலகும்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். தொட்ட காரியங்கள் துலகும் யோகம் உள்ளது. உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். பெரியவர்களுக்கு கடன், நோய் விலகுவதற்கான யோகம் உள்ளது. நீண்டநாட்களாக உருத்திக் கொண்டிருந்த கடனை அடைப்பீர்கள். நோய்களை குணமாகும். மொத்தத்தில் இந்த ஆவணி மாதம் உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் மாதமாக உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications