Viruchigam: விருச்சிக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. புது வீடு புது காரு என்ஜாய்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் விருச்சிகம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி மற்றும் விருச்சிக லக்னத்தினருக்கு ராசியின் அதிபதி செவ்வாய் ராசியிலேயே குரு பார்வையில் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பணம், நகை, கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ராசியதிபதி பலமாவதால் கெட்ட எண்ணங்கள், தொடர்புகள் அனைத்தும் விலகும். வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வலிமை அடைவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
கடன் தீரும்
கடனை அடைப்பதற்கு நல்ல வருமானம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்கள், நோய் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் விலகும் வாய்ப்புகள் உண்டு. குரு பார்வை இருப்பதால் நல்ல யோகம் உண்டாகும். 10 ஆம் அதிபதியான சூரியன் ராசிக்குள் வருவதால் தொழில் நன்றாக வளரும். சொந்த தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த இருள் நீங்கும்.
அடுத்தபடிக்கு செல்லும் யோகம்
அடுத்த கட்டத்துக்கு யாரையும் எதிர்பார்க்காமல் அடுத்த விஷயத்தை நோக்கி ஓடுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஜாதகத்தில் சனி வக்கிரமாக இருந்தால் பணவரவு, பொருளாதாரம் அனைத்திலும் நன்மை அடைவீர்கள். 3, 4க்கு உடையவராக இருப்பதால் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
முயற்சிகள்
சனி நன்றாக இல்லையெனில் நவம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஒருமுறைக்கு, இருமுறைக்கு முயற்சிகளைப் போடுவது நல்லது. 7 மற்றும் 12 ஆம் அதிபதியான சுக்கிரன் 12 ஆம் வீட்டிலேயே புதனோடு சேர்ந்து லட்சுமி நாராயண யோகத்தோடு அமர்ந்திருக்கிறார். வெளிநாடு, வெளியூரில் பெண் அமையும்.
சுற்றுலா
வெளியூர்களுக்கு இன்பச் சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். மகிழ்ச்சியாக இருக்கும் மாதமாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். குரு உச்சமாக இருந்தாலும் 11 ஆம் தேதிக்கு மேல் வக்கிரகதி ஆகிறார். வக்கிரகதி ஆனாலும் பெரிய பாதிப்புகளை கொடுக்காது. பொருளாதாரம், குடும்பத்தின் தேவை, குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும்.
திடீர் பண வரவு
புதன் 8, 11 ஆம் அதிபதியாகி 12 இல் இருப்பதால் திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நல்ல சம்பாத்தியம் உண்டாகும். நல்ல வருமானம் கிடைக்கும். நிறைய விரயங்களும் உண்டாகும் என்பதால் அவற்றை சுப விரயமாக மாற்றிக் கொள்வது நல்லது. குடும்பத் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ந்திருக்கும் அமைப்பு உண்டாகும். கெட்டவை அனைத்தும் உங்களை விட்டு விலகும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications