Rasi Palan This Week: அடித்தாடும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Viruchigam Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Viruchigam Weekly rasi palan lucky zodiac signs

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் விருச்சிகத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)

விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனதில் இன்பம் ஏற்படும். சந்தோஷத்திற்குப் பஞ்சமே இருக்காது. ஆளுமை நிறைந்த மனிதர்களாக மாறுவீர்கள். எல்லோரும் உங்களை போற்றக்கூடிய அமைப்பு உள்ளது. பெண்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

திருமண யோகம்

பொருள் கிடைக்கும் அமைப்புள்ளது. திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டாகும். நிலம் வாங்குவோர் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அடுத்தடுத்து சுபகாரிய அமைப்புகள் ஏற்படும். படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும்.

முன்னேற்றம்

பெரிய பொறுப்புகளுக்கு வரும் யோகம் உண்டாகும். முகவரி இல்லாதவர்கள் விசிட்டிங் கார்டு போடக்கூடிய அமைப்பு ஏற்படும். இளம் வயதை சார்ந்த விருச்சிக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

மகிழ்ச்சி

இந்த வாரத்தின் இறுதி பகுதி உங்களுக்கு சாதகமாக இருக்கும் திடீர் சந்தோஷம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். நிறைய பேரை சந்திக்கும் யோகம் உண்டாகும். ஆனந்தமாக இருப்பீர்கள். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிறிய சிறிய விஷயங்களில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

ரத்தத்தில் பரவும் நோய், லிவர், கிட்னி செயல்பாடுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மார்பகப் பிரச்சனை, உடல் சூடு, பின்பகுதி பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விருச்சிக ராசியில் இருக்கும் பெரியவர்கள் நெஞ்சக அடைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் தாரளமாக இருக்கும்.

வழிபாடு

சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதா ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேன்மையைத் தரும். முருகர் வழிபாடு செய்வது நன்மை. சுப்பிரமணிய புஜங்கத்தை தினமும் படிப்பது, கேட்பது மேன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+