Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. செட்டிலாகும் பிரகாசமான நேரம்
Viruchigam Rasi Palan: மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் விருச்சிகத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், மே 4 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, சித்திரை 21 ஆம் தேதி முதல் சித்திரை 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களின் பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. எல்லா விதத்திலும் நன்மைகள் ஏற்படும் நல்ல அமைப்பு. உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பதவி உயர்வு
பிள்ளைகளின் படிப்பில் இருந்த சிக்கல்கள் தீரும். பதவி உயர்வு கிடைப்பது ஆனந்தத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும் அமைப்பு. இழுபறியாக இருந்த விஷயங்கள் நீங்கி அடுத்தடுத்து நடக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தை இந்த காலகட்டத்திலேயே செட்டிலாக்கிக் கொள்வது முன்னேற்றத்தை தரும்.
யோகம்
யோகமான காலகட்டமாக இருக்கும். பெண்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். நினைத்த காரியங்கள் கைகூடிய வரும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, சொத்துகள் சேர்வது போன்ற அமைப்பு உள்ளது. அயல்நாட்டில் செட்டிலாவது, முதலீடு செய்வது போன்ற யோகம் உண்டாகும்.
அனுகூலம்
பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். தூக்கமின்மை ஏற்படும். பிள்ளைகள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். வண்டி, வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கை, கால் பிரச்சனைகள், கொழுப்பு கட்டி போன்றவை வரும் வாய்ப்புள்ளது. மற்றபடி எல்லா விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும். உங்களுக்கான தேவைகள் எல்லாம் நிறைவேறும். மனதார சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.
வழிபாடு
யோசித்து கொண்டே இருக்காமல் உங்கள் வாழ்க்கை உயர்வுக்கான முயற்சிகளை செய்வது நன்மை பயக்கும். மகான்கள் வழிபாடு, ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். அருகில் இருக்கும் அம்மனுக்கு மாம்பழ தானம் கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதாரமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications