Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு சிக்கல்கள் தீரப்போகுது.. ஆனா ஆபத்தும் காத்திருக்கு.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கார்த்திகை மாதத்தைப் பொருத்தவரை விருச்சிக ராசியினர் கையெழுத்துப் போடும் விஷயங்கள், வாகனங்களை ஓட்டுவது, பணம் கொடுக்கல், வாங்கல், மேலதிகாரிகள், குடும்பம், உடன் வேலை செய்பவர்கள் மற்றும் வெளியிடம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சங்கடங்கள் வரும்
கோபங்களைத் தவிர்த்து மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. தினந்தோறும் ஏதாவதொரு கோயிலில் அமைதியாக அமர்ந்துவிட்டு வருவது பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். பணம், வசதிகள் இருந்தாலும் உங்கள் மனதில் ஏதாவதொரு பறிதவிப்பை ஏற்படுத்தும். அந்த நிலைமைகள் பல நேரங்களில் தவறாக கொண்டு போய்விடும் என்பதால் கவனம் தேவை. சக ஊழியர்களுடன் தேவையில்லாத மன வருத்தமும், சங்கடமும் ஏற்பட்டு விடும் வாய்ப்புள்ளது
ஆரோக்கியத்தில் கவனம்
வெளியிடத்தில் இருக்கும் கோபத்தை வீட்டில் உள்ளவர்களிடம் காட்டும் வாய்ப்புள்ளதால் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. குறை ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், ஹார்மோன் குறைபாடுகள், தைராய்டு பிரச்சனை, முதுகு தண்டுவட கோளாறுகள், கால் பகுதி, பாதப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது. உடற்பயிற்சி செய்யாத விருச்சிக ராசியினர் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு ஆட்பட நேரிடும்.
அடுத்தடுத்து நல்ல விஷயங்கள்
பிள்ளைகள் விஷயத்தில் நல்ல சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளது. இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறி, இனி அடுத்தடுத்து நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் சாத்தியக் கூறுகள் உண்டு. பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். விநாயகர், துர்க்கை, பெருமாள், தாயார், அனுமன் வழிபாடு உங்களுக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications