Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு பேச்சில் தான் கண்டம்.. பண வரவு கூரையை பிச்சுகிட்டு கொட்டும்
வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் இருக்கின்றனர். வாக்கு ஸ்தானதிபதியான குரு பலம் கொடுப்பதால் பேச்சினால் பெரும் சிக்கல் வரும் வாய்ப்புள்ளதால் கனிவான வார்த்தைகளைப் பேசுவது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம் என எல்லா விஷயங்களிலும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
பயணத்தில் கவனம்
பயணங்கள் சமயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிறிய வாக்குவாதம் கூட பெரிய கஷ்டத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் ரீதியாக இருந்து வந்த சவால்கள், பிரச்சனைகள் நீங்கும். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக நீங்கும்.
தடைகள் நீங்கும்
தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் தீரும் காலம். பண வரவு நன்றாக இருக்கும். தூக்கமின்மையால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். சரியான நேரத்தில் தூக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சந்திரன் நீச்சமான ராசி என்பதால் புத்திசாலித்துடன் எப்போதும் இருப்பீர்கள்.
எதிரிகளிடம் கவனம்
உடன் இருக்கும் எதிரிகள், வெளியில் இருக்கும் எதிரிகளிடம் நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. எல்லா விஷயங்களும் எளிமையாக போகும் என்று நினைக்க கூடாது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது.
வழிபாடு
காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி, தொண்டையில் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. முருகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். சுப்பிரமணிய புஜங்கத்தை படிப்பது கேட்பது நன்மையைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications