Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழிலில் மிக கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தொழிலில் செய்யாத தவறுக்கு பழி ஏற்கும் சூழல் ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் கோபதாபம், வருத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. துணை விஷயத்தில் விரயங்கள் காணப்படும். ஆனால் அவை சுப விரயங்களாக இருக்கும். வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சாதம், எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தானம்
திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு கொடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி அனுகூலம் காணப்படும். இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மன தைரியம் அதீதமாக ஏற்படும்.
செல்வாக்கு கூடும்
தெய்வ கடாட்சம் ஏற்படும். தாய் வழி உறவில் மேன்மை ஏற்படும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். காரியசித்தி மாலையை சொல்லி வந்தால் 10 ஆம் இடத்தில் இருக்கும் கேது வலுப்பெற உதவும். தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றியை நோக்கி செல்லும் காலகட்டமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.
யோக பலன்கள்
பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அற்புதம் ஏற்படும். யோக பலத்தை அதிக அளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். ரத்த பந்த உறவுகளில் எந்தவித குழப்பமும் இல்லாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்தடுத்து சுப காரிய செய்திகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
அடிவயிறு, அசிடிட்டி, கழிவுப் பாதை, வயிற்றில் கற்கள் தொந்தரவுகள் போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எதிரிகள், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். விருச்சிக ராசியினர் மனதிற்குப் பிடித்த பெண் தெய்வ வழிபாடு செய்வது மேன்மையைத் தரும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 100 ஆவது பாடலை கேட்பது, படிப்பது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications