Viruchigam Rasi Palan: விருச்சிகம் ராசிக்கு இனி ஏறுமுகம் தான்.. சித்திரையில் வரும் குட்நியூஸ்
Viruchigam Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், விருச்சிகம் ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிகம் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசியினருக்கு மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும் காலகட்டம். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டம், பயம் நீங்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம்.
பொறுப்புகள்
புதிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய அற்புதமான காலகட்டம். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய ஏற்றமும், சந்தோஷமும் ஏற்படக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். இழுபறியாக இருந்து நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டு.
செல்வாக்கு
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எந்தவிதமான பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளின் நம்பிக்கை, ஆதரவைப் பெறுவீர்கள். திடீரென்று பெரிய அளவுக்கு பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும்.
தன்னம்பிக்கை
தொழிலில் செயல் திறன் மேம்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், அங்கீகாரத்தையும் பெற்று தரக்கூடும். செல்வாக்கு, நம்பிக்கை அதிகரிக்க கூடிய மாதம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகர்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை சவால்களை எதிர்கொள்ள உதவும்.
ஆரோக்கியம்
குடும்பத்தில் துணையின் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். உங்கள் ஆரோக்கியத்தில் சளி, அலர்ஜி தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விஷ்ணு காயத்ரி, விஷ்ணு சஹஸ்ஹர நாமத்தை கேட்பது குடும்பத்தில் உள்ள விரயங்களைப் போக்கும். வெள்ளிக்கிழமைகளில் மதியம்தோறும் உணவு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.
வழிபாடு
மகாலட்சுமியை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மகாலட்சுமி, பார்வதி தேவிக்கு வெண் தாமரை கொடுத்து வெள்ளிக்கிழமையில் அர்ச்சனை செய்வது தடைபட்டிருந்த அனைத்து விஷயங்களையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
