Viruchigam Rasi Palan: கோடியில் புரளும் விருச்சிக ராசி.. கொட்டும் பணம்.. கோபம் தவிர்ப்பது நல்லது
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் கோபம் மிக அதிகமாக இருக்கும். அதனால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் ஏற்படுவதால், கம்யூனிகேஷனில் கோபம் வெளிப்படும். உயரதிகாரிகளிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. எந்தவித சிக்கலிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
திருமண யோகம்
சில விருச்சிக ராசியினர் மீது மறைமுக சில குற்றச்சாட்டுகள் வைக்கும் சூழல் உள்ளது. இந்த காலகட்டத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 7 ஆம் இடத்துக்கு உரிய சுக்கிரனும், ராசியாதிபதியும் சேர்ந்து 3 ஆம் இடத்தில் இருப்பது யோகமான அமைப்பாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் நடக்கும். நல்ல முறையில் திருமணம் கைகூடி வரும்.
பணவரவு
புதிய வேலை, அரசு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தொண்டை, கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த மாதத்தில் இருக்கும். 8 இல் குரு இருப்பதால் பண வரவு நன்றாக இருக்கும். திடீர் வருமானம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் புதனும், ராகுவும் இருப்பதால் சிலருக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை, மூட்டு வலி போன்றவை ஏற்படும். 5 ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். 5 குருவின் வீடு, குரு 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
குடும்பம்
பிள்ளைகள் உங்கள் சொல்லைக் கேட்காத சூழல் ஏற்படும். பிள்ளைகளைப் பற்றி மற்றவர்களிடம் குறை சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களை கொஞ்சம் விட்டுப் பிடிப்பது ஏற்றத்தைத் தரும். அனுபவத்தின் மூலமாக பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். படிக்கும் மாணவர்கள் கல்வியில் அதீத கவனம் செலுத்த வேண்டும். தொழில் ரீதியான வளர்ச்சி நன்றாக இருக்கும். உள்ளூர் தொழில் சிறப்பாக அமையும்.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. ஏற்றம் மிகுந்த மாதமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். சுவாமி மலை முருகனை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். 1 ஆம் தேதி தைப்பூசம் வருகிறது.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications