Viruchigam: சுக்கிரன் அருளால் விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. மே மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத விருச்சிக ராசிக்கான கிரக பலன்கள்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு இந்த மாதத்தின் பெரும்பாலான நாட்களில் 7 ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 11 ஆம் தேதி மாறும் செவ்வாய் பெயர்ச்சியின் மூலமாக உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியில் ஆட்சியாக அமர்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மே மாத கடைசியில் ஜூன் மாதம் 2 ஆம் தேதி உச்சகுரு ராசியைப் பார்க்கிறார்.
பண வரவு
நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பெயர்ச்சியாக இருக்கும். குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். கடந்த 2 ஆண்டு முழுவதுமே கையில் காசு இல்லாமல் இருந்திருப்பீர்கள். இனி பணம், காசுகள் வந்து சேரும் அமைப்பு ஏற்படும். எல்லா விஷயங்களிலும் தடங்கல்கள், தடைகள், அலைச்சல்கள் இருந்திருக்கும். நேரத்திற்கு சாப்பிடக்கூட முடியாத நிலைமை இருந்திருக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கடன் தீரும்
கடன் தொல்லைகள் நீங்கும். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் நிறைய பிரச்சனைகளை, பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். அவர்களுக்கான தொழில், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் சிக்கல்களைச் சந்தித்து வந்திருந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். நல்லவை நடக்கும் மாதமாக இருக்கும்.
சுக்கிரன் பார்வை
ராசியை சுபரான சுக்கிரன் பார்ப்பதால் நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். கூட்டாளிகள் உதவி செய்வார்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். இதுவரை வராமல் இருந்து வந்த பணம் மீண்டும் வந்து சேரும். ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும் ஆதரவு, அனுசரணம் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் ஆரம்பித்துள்ளவர்களுக்கு, டிராவல்ஸ், டெக்ஸ்டைல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனிய வருமானம் உள்ள மாதமாக அமையும்.
முன்னேற்றம்
ஓடிக்கொண்டே இருக்கும் தொழில் செய்பவர்கள் ஓட்டுநர்கள், உணவு டெலிவரி செய்பவர்கள், கட்டடம், செங்கல் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், பத்திரிகை துறையில் இருப்பவர்கள், விஷுவல் மீடியாவில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் 11 ஆம் தேதியில் இருந்து நல்ல மாற்றங்கள் வந்து சேரும்.
தொட்டது துலங்கும்
இதுவரைக்கும் சம்பாதிக்க முடியாதவர்களுக்கு நல்ல சம்பாத்தியங்கள் அமையும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். பங்குச் சந்தையில் பணத்தை விட்டு விட்டோம் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து பணம் வரக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான மாற்றம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications