Viruchigam Rasi Palan: மேல ஏறி வரோம் ஒதுங்கி நில்லு – விருச்சிக ராசிக்கு உயரும் செல்வாக்கு
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் சூரியன், கேது, சந்திரன் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதனால் உங்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் லாபம் இரண்டு மடங்காகும். இறங்கிய காரியத்தில் எல்லாம் வெற்றி குவியும். கடந்த காலங்களில் தடைபட்ட இழுபறி காரியங்கள் நிறைவேறும்.
இலக்கு
குறிவைத்த இலக்குகள் நிச்சயமாக நிறைவேறும். உங்களின் தெளிவான செயல்பாட்டால் இலக்குகளை எளிதாக அடைவார்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் பண வரவு போன்ற நன்மைகள் ஏற்படும். பூர்விக சொத்துகள், வழக்குகள் உள்ளிட்டவற்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
விட்டதை பிடிக்கும்
விட்டதை எல்லாம் பிடிக்கும் காலம். எதிர்பார்த்த இடத்தில் புதிய கடன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் விரிவாக்கம் செய்வீர்கள்.
கவனம்
கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கண்டம் உள்ளது. அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைட்டமின் கால்சியம் குறைபாடு, கால் முட்டி பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும்.
பரிகாரம்
அதிகம் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய, ஆடம்பர பொருட்கள் உடையும். நண்பர்கள், நெருங்கிய உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வீண் விவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இரவு நேர பயணம், தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பதற்றம், கோபம் ஆகியவற்றை தவிர்க்கவும். செம்பு பாத்திரம், கோதுமை வாங்கி தானம் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் வீடு அருகே உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது ஏற்றம் தரும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications