Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. சிங்கம் மாதிரி கெத்தா வாழப் போறீங்க
Viruchigam Rasi Palan: புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த வாரம் முக்கியமான வாரம். வாழ்வில் முன்னேற்றம் பெற தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். பசு மாடுகளை தானமாக அளிக்கலாம். 19 ஆம் தேதி புண்ணிய நதிகளில் நீராடுவதால் கர்மாவுக்கான கடன்கள் நிவர்த்தியாகும். 25 ஆம் தேதி ரதசப்தமி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சூரிய பகவானை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
இந்த வாரம் மிக முக்கிய கிரகப் பெயர்ச்சியான புதன் பெயர்ச்சி நடைபெறுகிறது. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். அந்த வகையில் இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றியைக் கொடுக்கக் கூடிய ஸ்தானம். சமார்த்தியம் உண்டாகும். உங்களுடைய சக்தியை நிலைநாட்டக் கூடிய காலகட்டமாக இருக்கும். செவ்வாய், புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் சனியின் வீட்டில் அமர்ந்திருக்கிறது. ஆயுதப் படை வீரர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் கிடைக்கும்.
பதவி உயர்வு
டெக்னாலஜி ஓரியண்டெட் பயிற்சிகளை படிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வுகள் கிடைக்கும். மருத்துவராக இருப்பவர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர்களுக்கு அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். விருச்சிக ராசியினருக்கு ஆற்றல் அதிகளவில் இருக்கும். ஒரு விஷயத்தை செய்தே முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பீர்கள்.
புதிய ஆர்டர்
நிறைய பேருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உட்காருவதற்கு கூட நேரமில்லாத நிலை ஏற்படும். உறுதியாக நின்று ஒரு விஷயத்தை செய்து முடித்து வெற்றி காணும் யோகம் உண்டாகும். புதன் பகவான் ராசி லக்கினத்துக்கும், அஷ்டமத்துக்கும், லாப ஸ்தானத்துக்குமான அதிபதியான புதன் 3 ஆம் இடத்திற்குச் சென்று அமர்ந்திருப்பதால் பாதுகாப்பான சூழல் ஏற்படும்.
தொழில்
புதன் மறைவது கணக்குத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிலம், ரியல் எஸ்டேட், ஆடிட்டிங், புரோமோஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பெரிய வெற்றிகளைக் காணக்கூடிய காலகட்டமாக இருக்கும். தடையில்லாமல் ஜெயிக்கக் கூடிய யோகம் உண்டு.
சுபவிரயம்
தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் அபிவிருத்தி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். லாபமும், சந்தோஷமும் உண்டாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பிள்ளைகள் விஷயத்தில் பூதக் கண்ணாடி ஆராய்ச்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மன அழுத்தம் தீரும். சுப விரய பிராப்தம் உண்டாகும்.
வழிபாடு
வயிறு, அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். தடைபட்டு வந்த காரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். மனக் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். விருச்சிக ராசியினருக்கு பெரிய வெற்றிகள் ஏற்படும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது, படிப்பது பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். வாராஹி அம்மன் வழிபாடு வாழ்க்கையில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications