Viruchigam Rasi Palan: இனி சிங்கப் பாதை.. டாப் கியரைப் போட்டு தட்டித் தூக்கும் விருச்சிக ராசி

Subscribe to Oneindia Tamil

Viruchigam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

viruchigam-rasi-palan-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-from-february-16-to-22

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)

விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஆற்றல் மிகுந்த வாரமாக இருக்கும். வாரத்தின் ஆரம்பம் முதல் தொடக்கம் வரை அற்புதமாக இருக்கும். பெரிய விருதுகள், அங்கீகாரம் கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். அண்ணன், தம்பிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் சரியாகும். விற்பனையாகாமல் இருந்த இடம், வீடு போன்றவை விற்கும் யோகம் உண்டு.

ஆரோக்கியம்

ரத்தபந்த உறவுகள், தாய் வழி, தந்தை வழி உறவுகள் மூலம் மிகப்பெரிய ஏற்றம், நம்பிக்கைகள் ஏற்படும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. புதிய முயற்சிகளில் அனுகூலங்கள் காணப்படும்.

மன அழுத்தத்தில் கவனம்

உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக மாறும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாகத் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம் மிகப்பெரிய நன்மைகளையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில், வேலையில் நிம்மதி

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி, வாகன முயற்சிகளில் வெற்றி ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகத்தில் அற்புதமான நிம்மதி ஏற்படும்.

வழிபாடு

விட்டுக் கொடுத்து பல காரியங்களை ஜெயிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். யாராலும் செய்ய முடியாத விஷயத்தை நீங்கள் செய்து முடிப்பீர்கள். முருகப் பெருமான் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். வாரத்தின் இரண்டாம் பகுதியில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம், பொருளாதாரம் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+