Rasi Palan This Week: விருச்சிகம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. வரும் 7 நாட்கள் ரொம்ப கவனம்
Viruchigam Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசிக்கு அஷ்டமத்தில் குரு அமர்ந்திருக்கிறது. பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன், சனி அமர்ந்திருக்கிறது. 6 ஆம் இடத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் உள்ளது. வேலையில் இடையூறுகள், பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. பிள்ளைகளுக்கு எலும்பு பாதிப்புகள், சர்ஜரி, உற்றார் உறவினரின் ஆரோக்கியத்தில் பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அனுகூலம்
குடும்பத்தில் பிள்ளைகளுடன் வாக்குவாதம் வைத்துக் கொள்வது இருப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் சகவாசத்தில் கவனம் தேவை. மற்றபடி யோக பலன்கள் கிடைக்கும். சந்தோஷம், அனுகூலம், வேலையில் மாற்றம் அனைத்தும் உண்டாகும். மன அழுத்தம் தீரும். நல்ல காரியங்கள் நடக்கும். வீட்டில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் ஏற்படும்.
கவனம்
சுபவிரயம் ஏற்படும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு நன்றாக இருக்கும். சொத்துகள் வந்து சேரும். நெஞ்செரிச்சல், தொண்டையில் முல், எலும்பு சிக்குவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சாப்பிடும்போது மென்று சாப்பிடுவது நல்லது. சாப்பாடுகளை மூடி வைத்து பயன்படுத்துவது நல்லது.
ஆரோக்கியம்
இதயம், சர்க்கரை, ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக தூங்குவது அவசியம். நம்பி ஏமாறும் அமைப்புள்ளது. கம்யூனிகேஷன், ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேண்டா வெறுப்பாக சில விஷயங்களை செய்வீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
ஆரோக்கியம்
எலும்பு, முதுகெலும்பு, முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கொழுப்பு கட்டி வருவது, சுழுக்கு ஏற்படும் அமைப்புள்ளது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
வழிபாடு
உற்றார் உறவினர், பாட்டி, தாத்தா, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தோஷம் 65 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும். முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்களைப் படிப்பது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications