Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு அடிக்கும் திடீர் யோகம்.. எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை
Viruchigam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசியினர் யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். மன அழுத்தம் தீரும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நன்மை பயக்கும்.
சங்கடங்கள் நீங்கும்
தூக்கமின்மையால் பெரிய கஷ்டங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். நல்ல நண்பர்களுடன் சந்தோஷமாக பேசுவது, நேரம் செலவிடுவது நல்லது. பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் பதட்டமில்லாமல் இருப்பது யோக பலத்தை பெற்றுத் தரும். செல்வாக்கு ஏற்படக்கூடிய அமைப்பு. இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
அரசு வேலை
அரசு வேலை கிடைக்கும். நிலம், ரியல் எஸ்டே், புரோக்கரேஜ், லோன் போன்றவற்றில் ஏற்றம் ஏற்படும். தலைமை அதிகாரம் கிடைக்கும். பெரிய பொறுப்புகள் வந்து சேரும். அஷ்டமத்தில் சுக்கிரன் குரு சேர்ந்திருப்பது நல்லது கிடையாது. பணவரவு நன்றாக இருக்கும். நேர்மையில்லாத பணங்கள் வந்து சேரும். ரிலேஷன்ஷிப்பில் கவனம் தேவை. தேவையில்லாத நட்புகளால் பாதிப்புகள் ஏற்படும்.
ஆரோக்கியம்
மொபைல், லாப்டாப், கம்யூனிகேஷன் டிவைஸில் பேசும்போது மிகுந்த கவனம் தேவை. இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் வேலையில் சிறிது மாற்றம் ஏற்படும். மனைவியின் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். மனைவிக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தேவையில்லாத டென்ஷன் குழந்தைகளால் ஏற்படும்.
வழிபாடு
சுக்கிரன் வீட்டில் சூரியன், புதன் இருப்பதால் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. ஆஞ்சநேயர் வழிபாடு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தோஷம் 70, பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
-
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications