Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மெகா ஜாக்பாட்
Viruchigam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான காலகட்டம். எல்லா விதத்திலும் ஏற்றம் உண்டாகும். பதற்றம் வேண்டாம். மாகன்கள் வழிபாடு நன்மையைத் தரும். கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹார்மோன் குறைபாடுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல்களை உச்சரிப்பது, கேட்பது செல்வத்தை அதிகரிக்கும்.
சுபச்செலவு
விநாயகரின் காரியசித்தி மாலையை படிப்பது தடைகளை தவிடு பொடியாக்கும். பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள், பண வரவுகள், சுபசெலவுகள் தொடர்ச்சியாக ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும் அமைப்பு உண்டு.
யோக பலன்கள்
செல்வாக்குகள் கூடும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். உறவுமுறையில் இருந்த சங்கடங்கள் தீரும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்குகள் கூடும். யோகமும், பண வரவும் உண்டாகும். அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும். அலைச்சல்கள் அதிகளவில் இருந்தாலும் நன்மைகள் பெரிய அளவில் கிடைக்கும்.
புதிய வேலை
யோசித்துக் கொண்டே இருந்த விஷயங்களில் இருந்து வெளியில் வருவது நன்மை பயக்கும். எல்லா விஷயத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதிய வேலைகளுக்குச் செய்து மகிழ்வீர்கள். உங்களுடைய மேலதிகாரியின் தொல்லை காணாமல் போகும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
திடீர் பண வரவு
கால் பாதம், மறைமுகப் பகுதிகளில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து சரியாகும். ரகசியமாக செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும். திடீர் பண வரவு, அரியர் பணங்கள் வருவது, வட்டிக்கு வரும் பணங்கள் வந்து சேருவது, சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். நிறைய ஏற்றங்கள் உண்டாகும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்ளும் நல்ல காலகட்டம்.












Click it and Unblock the Notifications