Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் விருச்சிகம் ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam rasi palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஜீவானதிபதியான சூரியன் பஞ்சம ஸ்தானமான 5 ஆம் இடத்தில் இந்த மாதம் முழுவதும் அமர்ந்திருக்கிறார். தொழிலில், வேலையில் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அற்புதமான மாற்றங்களைச் செய்து அதன் மூலமாக வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
குரு பார்வை
பங்குனி மாதத்தில் உங்களுக்கு பெரியளவில் தொழில் ரீதியாக கைகொடுக்கும். பங்குனி மாதம் 20 ஆம் தேதி வரைக்கும் ராசிநாதன் செவ்வாய் 4 ஆம் இடத்தில் வலிமையாக குருவின் பார்வையில் இருப்பதால் பெரிய யோகத்தைக் கொடுக்கும். குறைகள் பெரிதாக இல்லாத நிறைகள் அதிகம் இருக்கக்கூடிய நல்ல மாதமாக உங்களுக்கு இருக்கும்.
கவனம்
அம்மாவுடன் கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. இருந்தாலும் இளையவர்கள் தாயுடன் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். சிலருக்கு அப்பாவுடைய உடல்நிலை, அல்லது பொருளாதார நிலைமை குறித்த கவலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் தந்தைக்கு உதவக்கூடிய சூழல் ஏற்படும்.
அனுகூலம்
தொழிலில் உயர்வு, சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு கண்டிப்பாக அதற்கான வாய்ப்புகள் அமையும். அனுகூலமாக அமைப்பு உண்டாகும். வேலை, தொழில், வியாபார அமைப்பில் முன்னேற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2 மாதத்தில் நடக்கக்கூடிய குருப்பெயர்ச்சியின் மூலாமாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பணவரவு
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கும் நல்ல காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை இப்போதிருந்தே போடுவீர்கள். பெரிய சோதனைகள் எதுவுமில்லாத நல்ல மாதமாக உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications