Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம் தரும் கிரகங்கள்.. செலவுகள் குறைந்து பணம் கொட்டும் நேரம்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

viruchigam-rasi-palan-what-kind-of-benifts-will-get-viruchigam-rasi-people-in-this-august-month

பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், விருச்சிக ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி பெண்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் பாக்கிய ஸ்தானம் வலுத்திருக்கிறது. அப்பா வழியில் இருக்கும் பிரச்சனைகள், மனஸ்தாபங்கள், சொத்தில் இருக்கும் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். அப்பாவுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். அப்பாவுடைய உடல்நிலை சரியாகக் கூடிய அமைப்பு உள்ளது. பாக்கிய ஸ்தானம் வலுப்பெறுவதால் வயதிற்கு ஏற்றாற் போல நல்ல விஷயங்கள் நடக்கும்.

திருமண யோகம்

படிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தான் சம்பாதிப்பதை விட மற்றவர்களுடைய பணம் உங்களுக்கு வரக்கூடிய அமைப்பு உள்ளது. அப்பா வழியில் யோகம் உண்டாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபங்கள் கிடைக்கும். நிலம் போன்றவை வாக்கினால் அதிலிருந்து நல்ல லாபங்கள் வரக்கூடிய மாதமாக இருக்கும்.

செலவுகள் குறையும்

பெரிய அளவில் செலவுகள் இருக்காது. செலவுகள் குறையக்கூடிய மாதமாக இருக்கும். கடன்கள் கொடுத்து வைத்திருந்தால் அந்தப் பணங்கள் கைக்கு வந்து சேரும். கணவர் உங்களுக்கு ஏதாவது வாங்கித் தருவார்கள். கணவர் முதலீடுகள் செய்ய முயற்சித்தால் உங்கள் பெயரில் செய்தால் நல்ல லாபங்கள் கிடைக்கும். நல்ல வரன்கள் அமையும்.

ஆரோக்கியம்

உங்கள் மனதிற்குப் பிடித்த மாதிரி கணவர் அமைவார்கள். பழைய நண்பர்கள் கணவராக மாறும் அமைப்பு உள்ளது. திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தைராய்டு, பிசிஓடி போன்றவை வரும். குழந்தை பாக்கியத்திற்கான சிகிச்சைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

மன அழுத்தம் தீரும்

மன அழுத்தம் போன்றவை வர வாய்ப்புள்ளதால் தினமும் தியானம் செய்வது ஏற்றத்தைத் தரும். முருக வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். செவ்வாழை தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். செவ்வாழையில் பஞ்சாமிர்தம் செய்து படைத்து வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.. துவரம்பருப்பு தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+