வச்சு செய்யும் சனி.. விருச்சிக ராசியை விடாத கருப்பு.. வக்கிர சனியில் அதிர்ஷ்டமா?.. துரதிர்ஷ்டமா?
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி பலன்
விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது விருச்சிக ராசி. ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர கதியில் இருக்கிறார். ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை சனி பகவான் வக்கிரகதியில் போவார். இந்த காலகட்டத்தில்
உடல்நலனில் சற்று பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ராகுவும் 4 ஆம் இடத்தில் இருப்பதால் அதீத அலைச்சல் ஏற்படும்.
பயணங்கள்
வேலைகளில் தொய்வு ஏற்படும். என்ன வேலை செய்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்காது. நாலரை மாத காலகட்டத்தில் முதல் ஒன்றரை மாதத்தில் அதிகளவிலான பயணங்கள் ஏற்படும். மறைமுகமான பண வரவுகள் உண்டாகும். சமையல் கலை வல்லுநர்கள், மருத்துவர்கள், ரத்தம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள், ஆன்மீகம் துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு பண வரவு இருக்காது.
பின்னடைவு
ஆகஸ்ட், செப்டம்பர் காலகட்டத்தில் எதிர்பாலினத்தவரால் சிறு சிறு தொந்தரவு ஏற்படும். பார்ட்னர்ஷிப்பில் சிறு பின்னடைவுகள் ஏற்படும். அதிக முதலீடுகள் தொழிலில் செய்யாமல் இருப்பது நல்லது. அடுத்த ஒன்றரை மாதத்தில் புதிய கடன்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலுக்காக புதிய கடன்கள் வாங்குவதற்கான வாய்ப்பு வரும்.
மாற்றம், ஏற்றம்
வேலையில் மாற்றங்கள் ஏற்படும். உடல்நலனில் ஆரோக்கியம் செலுத்துவது நல்லது. படிக்கும் மாணவ, மாணவிகள் அதிக முயற்சியைப் போடுவது நல்லது. எந்த விஷயத்தை நீங்கள் செய்தாலும் அதில் அதீத உடல் உழைப்பு, நேரத்தை போட வேண்டியிருக்கும், புதிய கடன்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது.
முன் ஜாமீன் வேண்டாம்
முன் ஜாமீன் கொடுப்பது, மற்றவர்களுக்கு கையெழுத்து போடும் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, இடம் வாங்கும்போது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற சவகாசங்களைத் தவிர்ப்பது நல்லது. கூடா நட்பால் கேடு விளையும். அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. குற்றாலூரில் உள்ள சனி பகவானை வழிபடுவதன் மூலமாக அனைத்துவிதமான மாற்றங்களும், ஏற்றங்களும் உண்டாகும். கோயில்களில் உள்ள குருக்களுக்கு வஸ்திர தானம் செய்வது நல்லது. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு முடிந்த அளவுக்கு இரும்பு சம்பந்தப்பட்ட, தோல் சம்பந்தப்பட்ட பொருள்களை தானமாக வழங்குவது நல்லது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications