விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. புது வீடு, புரோமோஷன், வெளிநாடு யோகம்.. ராஜ வாழ்க்கை
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்
விருச்சிகம்
விருச்சிக ராசி, லக்கினக்காரர்களுக்கு கால், முட்டி சம்பந்தப்பட்ட பாதிப்புகள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு அதிகளவில் ஏற்படும். நண்பருக்கு பணம் கொடுத்து பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. பணம் கொடுத்தால் திரும்பி வராது. எதிர்பாராத சிபாரிசு மூலமாக அரசு சார்ந்த சீட் கிடைக்கும். பதவி உயர்வு பெறுவதற்கான சூழல் உண்டாகும்.
பதவி உயர்வு
சிலருக்கு இடமாற்றம், அரசு வேலைகள், நீட் சீட்கள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு உங்கள் கதவைத் தட்டும். பெரிய வேலைவாய்ப்பு, பெரிய ஆர்டர் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதுவரை உங்களுக்கு உச்சகட்ட அழுத்தம் இருக்கும். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. மனதார சிவபெருமானை வழிபடுவது நல்லது. தொடையில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வெளிநாடு செல்லும் யோகம்
சூரியன் 11 ஆம் இடத்துக்கு வருவதால் தொழிலில் இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் விலகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பயணங்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் அற்புதமான மாதமாக இருக்கும். தாய்மாமன் வழியில் ஏதாவது நன்மைகள் கிடைக்கும்.
வீடு வாங்கும் யோகம்
வீட்டில் இந்த ஒரு மாதத்தில் கெட்ட செய்திகள் வந்து சேரும். விருச்சிகத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ருத்ரன் வழிபாடு அற்புதத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications