Viruchigam Rasi Palan: விருச்சிகத்துக்கு அடிச்ச ஜாக்பாட்.. குரு, சுக்கிரனால் கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

2025 9 2 8 15 12 45 10 9 10 11 9 10 10 11 8 9 10 11 12 15 4 5 8

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான நல்ல அமைப்புகள் ஏற்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு குருவின் பார்வையில் உங்கள் ராசிநாதன் வருகிறார். யோகாதிபதியான குரு பகவான் 2 ஆம் இடத்தைப் பார்த்து, 8 இல் மறைகிறார். 15 ஆம் தேதிக்குப் பிறகு 12 ஆம் இடத்தில் 45 நாட்களுக்கு செவ்வாய் அமர்ந்திருக்கப் போகிறார். குருவின் பார்வையில் ராசிநாதனோ, ராசியோ இருக்கும்போது அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

வெற்றிகள் கிடைக்கும்

செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் மாறிய பின்னர் அனைத்து விஷயங்களும் சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பிக்கும். 9, 10, 11 ஆம் இடங்களில் பெரும்பாலான கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் 9 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்கிறார். பின்னர், 10 ஆம் இடத்துக்கு வந்து விடுவார். லாபாதிபதியும், போட்டிகளில் அனைத்து விதமான வெற்றிகளையும் கொடுக்கக்கூடிய புதன் லாபத்தில் அமர்கிறார்.

வெளிநாடு யோகம்

சூரியனும் 10 ஆம் இடத்தில் அமர்ந்து 11 ஆம் இடத்துக்கு வருகிறார். இதனால் தொழிலில் இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் விலகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பயணங்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் அற்புதமான மாதமாக இருக்கும். தாய்மாமன் வழியில் ஏதாவது நன்மைகள் கிடைக்கும்.

தாய் வழியில் நன்மை

தாய்மாமன் மகள், மகனை காதலிப்பது, பிரச்சனைகள் போன்றவற்றில் நல்ல மனமாற்றம் ஏற்படும். 8, 9, 10, 11, 12 ஆகிய அனைத்து கிரகங்களும் வரிசையாக இருப்பது நல்ல அமைப்பு. மாதத்தின் அம்மாவின் தரப்பில் ஏதாவது சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும். செப்டம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகு குருவும், சுக்கிரனும் 4 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவைப் பார்ப்பதால் அம்மாவிடம் இருந்து வாழ்த்துகள் பெறும் வாய்ப்புள்ளது.

பண வரவு நன்றாக இருக்கும்

5 இல் சனி இருப்பதால் குழந்தைகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். குழந்தைகளைக் கண்காணிக்க கூடிய அமைப்புகள் ஏற்படும். 8 இல் இருக்கும் குரு வருமானத்தைக் குறைக்க மாட்டார். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. அற்புதமான மாதமாக இந்த மாதம் அமையும். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடக்கும் யோகம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+