அடிச்ச 10 பேருமே டான் தான்.. விருச்சிக ராசிக்கு பலம் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் தான் ராசி மற்றும் லக்னத்துக்கு அதிபதி. உங்கள் கடன், நோய், பகை உள்ளிட்ட ஆறாம் இடத்துக்குரியவர். இந்நிலையில் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் வந்து அமரப் போகிறார். பல மகிழ்ச்சியான தகவல்களுடன் அற்புதமான பலன்களை கொடுக்கும்.
லாபம்
கடந்த 3 மாதங்களாக உங்கள் ராசிநாதன் நீட்ச நிலையில் கேது பகவானுடன் இருந்தார். இதனால் ஏராளமான பிரச்ச னைகள் வந்திருக்கும். காரியங்களில் தடைகள் வந்திருக்கும். மகிழ்ச்சி, பணம், லாபம் ஆகியவற்றை குறிக்கும் 11 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகிறார். மனதில் இருந்த சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
திறமை
இந்த 48 நாட்கள் வாழ்க்கையின் அற்புதமான நாட்களாக இருக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கடந்த கால தடைகள் நிவர்த்தியாகும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் உங்களின் தனித்திறமையால் சமூகத்தில் தடம் பதிப்பீர்கள். உங்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
எதிரிகள்
ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி உங்களின் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரம் உயர்வதால் கடன் சுமை குறையும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிகள் பலவீனமாவார்கள். உங்கள் எதிரிகளை சாமர்த்தியமாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் இருந்த எதிர்மறை சிந்தனை நீங்கி, நேர்மறை சிந்தனை அதிகரிக்கும்.
செல்வாக்கு
மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்போருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். உத்யோகம், தொழிலில், சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவார்கள். சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.
அரசு வேலை
அரசு வேலைக்கு முயற்சி செய்வோருக்கு, தேர்வு எழுதியவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சிரூடை சம்பந்தப்பட்ட பணிகள் நிச்சயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் இந்த காலம் உயர்வை கொடுக்கும். அரசு ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகள் நல்லபடியாக நடக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உருவாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வரவு கிடைக்கும்.
வெளிநாடு
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்யோகம், வீடு, தொழிலில் உரிய மாற்றங்கள் நிகழும். வெளிநாடு முயற்சி செய்வோருக்கு ஜெயம் உண்டாகும். இன்ப அதிர்ச்சியாக அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும். நீங்கள் யாரென்று சமூகத்துக்கு நிரூபிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications