Rasi Palan This Week: ஜாவா சுந்தரேசனாக மாறும் விருச்சிக ராசி.. எக்கச்சக்கமாக நடக்க போகும் மாற்றம்
வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரமாதமாக இருக்கும். உத்யோகம், தொழிலில் அதி அற்புதமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். உத்யோகம், தொழில் இரண்டிலும் எதிர்பாராதளவுக்கு ஏற்றம் கிடைக்கும். தொழிலில் இருந்து வரும் தடைகள் விலகும். மனதில் இருந்த பாரம் குறைந்து நிம்மதி உருவாகும்.
புதிய முயற்சிகள்
உத்யோகத்தில் இருந்த பணிச்சுமை, பிரச்சனைகள் சரியாகும். மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். உத்யோகம், தொழில், கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகள் வெற்றியாக மாறும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் நல்ல பலன்களும், மாற்றமும் கிடைக்கும். வெளிநாடு முயற்சிகள் கைக்கூடும்.
அசையும் அசையா சொத்து
உத்யோகத்தில் தடைகள் விலகி பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை தேடி வரும். சுப காரிய தடைகள் விலகி திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும். நிலம் சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். புதிய நிலம், வீடு, வண்டி, வாகனம் போன்ற அசையும், அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். வீட்டை புனரமைக்கும் வேலையை செய்வீர்கள். இந்த வாரம் முழுவதும் நல்ல பலன்களால் ஆதாயமடைவீர்கள்.
பரிகாரம்
மனதில் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து பயம் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது நடக்க போகிறதோ என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கும். கண், வயிறு, கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். குலதெய்வ கோயில் சென்று வழிபடுவது மனதை வலிமைப்படுத்தும். பைரவர் வழிபாடு எல்லாவற்றிலும் ஏற்றத்தை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications