வார ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எவை?.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: பங்குனி மாதம் ஆரம்பிக்கிறது. மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பங்குனி மாதம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், பங்குனி மாதத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார்.

Weekly rasi palan Astrology lucky zodiac signs

மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடக ராசி: கடக ராசிக்காரர்கள் பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பாரம்பரியமாக இருக்கக்கூடிய நோய் பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடா நட்பு கேடில் முடிவதற்கான வாய்ப்புள்ளது. பயணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிவன் வழிபாடு நம்பிக்கை, சந்தோஷத்தை தரும்.

சிவ மந்திரங்கள், சிவன் கவசம், கோளார் பதிகம் கேட்பது நல்ல பலன்களைத் தரும். மனதில் உள்ள சங்கடங்கள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். பெரியவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை பெறுவது நல்லது. மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை கவனிக்க வேண்டும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிதாக சந்திப்பவர்களால் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

சிம்ம ராசி: தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற விஷயத்தில் கவனம் தேவை. அனுமன் சாலிஷா கேட்பது, அனுமன் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். சட்டத்திற்குப் புறம்பானவர்களிடம் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளும். அதில் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உத்தியோகம், படிப்பு, தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். பெரிய சந்தோஷங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்து அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பதட்டம் படிப்படியாகக் குறையும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். தடைகள் தவிடு பொடியாகும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனை ஒன்று தீரும்.

கன்னி ராசி: குடும்பத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவியின் உடல் நிலையில் எச்சரிக்கை அவசியம். விரதம் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. தெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. கன்னி ராசிக்காரர்கள் உடலை வறுத்தி பூஜை புனஷ்காரங்களை செய்யக் கூடாத மாதம் இது. தொழில் கூட்டாளிகளை வைத்துக் கொள்வது நல்லது. அவர்கள் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடவே வைத்துக் கொள்ளுங்கள், பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுப காரியங்களை நடத்தி முடிப்பது நல்லது.

குடும்பத்தில் அந்நியர்கள் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு போன்ற விசயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கோபப்படாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வில் வரும் தடைகள் நீங்கும். இடமாற்றம், வீடுமாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+