வார ராசி பலன்: தங்கத்தை வாங்கி குவிக்க போகும் ராசி.. மிதுனம், கடகம் அதிர்ஷ்டம் பெறும் ராசி எது?
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்: நவக்கிரகத்தில் சுக்கிரன் வழிபாடு மிதுன ராசிக்காரர்களுக்கு சகல விதமான ஏற்றங்களைக் கொடுக்கும். சகல வித சந்தோஷங்கள் ஏற்படும். விரையங்களைக் குறைக்கும். குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயங்களில் ஏற்றத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், மலேரியா, காய்ச்சல் போன்ற விஷயங்களில் அதீத எச்சரிக்கை தேவை.
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். முதலாளிகள் உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனை தீரும். மேலதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்துக்குச் செல்லும் நிலை ஏற்படும். வண்டி வாகன மாற்றங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குபவர்களுக்கு அதற்குண்டான ஆக்கப்பூர்வமான நல்ல விஷயங்கள் கிடைக்கும்.
எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். தங்கம் எந்த விலைக்கு விற்றாலும் அதை வாங்கக்கூடிய அமைப்பு உங்களுக்கு உண்டாகும். உத்தியோகம், வேலை, தொழிலில் அபிவிருத்தியான காலகட்டம் ஏற்படும். மன திருப்தி ஏற்படும். பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோகத்தில் அதி அற்புதமான ஏற்றம், மன திருப்தி ஏற்படும்.
எப்போதும் பெரிய அளவுக்கு சந்தோஷத்தைப் பெறுவீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட கடன்களை தீர்ப்பீர்கள். சத்ருக்களில் இருந்து பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்லசெய்தி வந்து சேரும். வண்டி வாகனத்தில் மாற்றம் ஏற்படும். சுக்கிரனுடைய காயத்ரி மந்திரங்களை சொல்ல சொல்ல அனுகூலம் ஏற்படும். துணையுடன் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது, செலவுகளைப் பெரிதுபடுத்தாமல் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது.
கடகம்: நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் வழிபாடு சகல விதத்தில் ஏற்றத்தை தரும். பிள்ளைகளுக்கு அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்கும் உங்களுக்கு அந்நியோன்யம் அதிகரிக்கும் காலகட்டம். அலர்ஜி, ஒவ்வாமை, சளி, மன அழுத்தப் பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். அஷ்டம சனி இருப்பதால் திருக்கணிதத்தின்படி விலகக்கூடிய வாரமாக இருப்பதால் எல்லா வகையிலும் நம்பிக்கை உண்டாகும். பெற்றோர், பெரியோருடைய தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
உறவினருடன் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. சொத்து பிரச்சனைகளில் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் ஜெயத்தையும், ஏற்றத்தையும் பெறக்கூடிய நல்ல காலமாக இருக்கும். பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், வியாபாரம், தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுடைய நீண்டகால செலவுக்கு சில கஷ்டங்கள் பட்டாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பிள்ளைகளிடம் கோபதாபம் கூடாது. அவர்களை மற்றவர்கள் முன்பு திட்டுவதை தவிர்க்க வேண்டும்.
தாய் வழி, தந்தை வழி உறவுகள், அக்கம்பக்கத்தினர் விஷயத்தில் கோபதாபமில்லாமல் இருந்தால் மிகப்பெரிய ஏற்றம், நம்பிக்கை, சந்தோஷம் ஏற்படும். இந்த வாரத்தில் புதிய அறிமுகங்கள், பயணங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விரையங்கள் அதிகமிருந்தாலும் அது சுப விரையமாக இருக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றம் உண்டாகும்.
விடுபட்ட தெய்வ வழிபாடுகளில் நிவர்த்தி ஏற்படுத்திக் கொடுக்கும். கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு பெரிய மதிப்பு உண்டாகும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
-
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications