Kadagam: கடக ராசிக்கு அடிவாங்கும் லாப ஸ்தானம்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்.. அதிர்ஷ்டமும் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

Kadagam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Kadagam

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)

கடக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். குழந்தைகளின் விஷயத்தில அற்புதமான அமைப்பு உள்ளது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என நல்ல மாற்றங்கள் காணப்படும். தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பதட்டம், பரபரப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

சங்கடங்கள் தீரும்

உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். துணையிடம் இருந்து வந்த சிறு சிறு மனக் கசப்புகள் நீங்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பலவிதமான சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். செல்வாக்குகள் கூடக்கூடிய காலகட்டம். உங்களுடைய செல்வாக்குகள் கூடும். எல்லா விதத்திலும் நம்பிக்கையும், அனுகூலமும் காணப்படும்.

பிரச்சனை

பாக்கிய ஸ்தானத்தில் சனி, லாப ஸ்தானத்தில் அடிவாங்குவதால் பணம் கொண்டு போய் சிக்கும் சூழல் ஏற்படும். நண்பர்களால் பிரச்சனை ஏற்படும். கால் முட்டிகளில் அடிபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படும். வெளியூர், வெளிநாடு பயணங்களை மேற்கொள்வீர்கள். முதலீடுகளை அதிகமாக செய்வீர்கள். எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படும்.

தொழிலில் அதிர்ஷ்டம்

தைரியம் அதிகரிக்கும். ராசி, லக்னத்தில் குரு வருவதால் புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வங்கியில் கேட்டிருந்த கடன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை பார்த்துக் கொள்வது நல்லது. அமோகமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். நண்பர்களை நம்பாமல் இருப்பது நல்லது. மூத்த அண்ணனுக்கு சிறு சிறு காயங்கள் வந்து போகும்.

100க்கு 90

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புரோமோஷன், சம்பள உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். முன்னேற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். எல்லாவிதமான நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டம். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+