Magaram: மகர ராசிக்கு எதிர்பார்க்காத மாற்றம் காத்திருக்கு.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
Magaram Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகர ராசி பலன் (Magaram Rasi Palan)
மகர ராசி, லக்கினம் சார்ந்த நபர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நன்றாக இருக்கும். பணவரவு ஏற்படும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் நல்ல காலகட்டம். இதுவரை இருந்து வந்த தடைப்பட்டு வந்த அனைத்து காரியங்களும் குருவின் பார்வையால் நிவர்த்தியாகும். தைரியம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.
யோக பலன்
குடும்பத்தில் துணையின் தேக ஆரோக்கியம், உங்களின் ஆரோக்கியம், வயிறு உபத்திரம், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை. மற்றவர்கள் குடும்பத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.
ஆரோக்கியம்
சர்க்கரை, நெஞ்சகம் சார்ந்த பாதிப்புகள், நுரையீரல் பிரச்சனைகள், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால் பார்த்துக் கொள்ள வேண்டும். பணம் வரவு நன்றாக இருக்கும். லோன கிடைக்கும். நினைத்த விஷயங்களை செய்து முடிக்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த லோன் கிடைக்கும்.
பேச்சில் கவனம்
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்குவீர்கள். பழைய நண்பர்களாக இருந்தாலும் அவர்களை தூரத்தில் வைத்து தொடர்பு கொள்வது நல்லது. குறிப்பாக பேச்சு சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய விஷயங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். அமோகமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
வாகனங்களில் சாகசங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். குரு பலம் இருந்தாலும் 2 இல் ராகு, 8 இல் கேது இருப்பதால் கோளார் பதிகத்தை கேட்பது, சொல்வது, சிவ மந்திரங்களை ஜெபிப்பது தடைகளை தவிடு பொடியாக்கும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதாரம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும்.
விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications