அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும்.. பணத்தை அள்ளும் ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
வார ராசி பலன்: பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் நட்சத்திரங்கள் இந்த வாரத்தல் உச்சத்தில் இருப்பதால் நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கல்வி மற்றும் தொழில்களை வெளிநாடுகளில் செய்ய விரும்புபவர்களுக்கு உகந்த நேரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

வாரத்தின் இரண்டாவது பாதி முதல் அரசுத் துறைகளுக்கான தேர்வுகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். காதலிப்பவர்கள் மற்றும் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சிக்கான காலமாக இருக்கும். உறவுகள் வலுப்படும். குடும்பத்துடன் இனிமையாந நேரங்களை செலவிடுவீர்கள். இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும்.
ரிஷபம்: இந்த வாரத்தின் ஆரம்பமே ரிஷப ராசிக்காரர்களுக்கு அருமையானதாக இருக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அள்ளித் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியலில் தொடர்புள்ளவர்கள் தங்களுடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும்.
சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனையால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படும். இருப்பினும் உங்களுடைய சாதுர்யத்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்தவர்களின் ஆலோசனை, ஒத்துழைப்பு கிடைக்கும். பருவகால நோய்ப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் நேரமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்திலேயே புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு உங்களுக்கு பிடித்தமான நபர்களிடமிருந்து ஆலோசனை கிடைக்கும். ஆலோசனையைப் பெற்று செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை சரியாகும். நிம்மதியான வாரமாக அமையும். தொழில், வியாபாரத்தில் உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுடைய துணையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், அசுப பலன்களும் கிடைக்கும். சுறுசுறுப்பாக இருப்பது நல்ல பலன்களைத் தரும். ஈகோவை தவிர்ப்பது நல்லது. கோபப்படுவதால் உங்களுடைய நிம்மதி கெடுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் மனதுக்கு விருப்பமானவருடன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மன அழுத்தம், மன சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசு சார்ந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். நிதி சார்ந்த நன்மைகளைப் பெறுவீர்கள். வணிகம், வியாபாரம், தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நன்மைகளைப் பெறும் வாரமாக இருக்கும்.
-
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications