சிம்மம் டூ விருச்சிகம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?
வார ராசி பலன்: பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம்: இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு கலவையான வாரமாக இருக்கும். அவசரமாக எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்கள், முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க கூடிய விஷயங்களில் எச்சரிக்கை தேவை. லாபம் பெறும் ஆசையைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். மன வருத்தம் உண்டாகும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு உற்சாகமும் தைரியமும் இந்த வாரத்தில் அதிகரிக்கும். கடந்த காலத்தில் எடுத்த முடிவுகளால் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. காதலிப்பவர்களுக்கு சிறப்பாந காலமாக இருக்கும். இருவருக்குமிடையே அன்பும் ஆதரவும் பெருகும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய நேரத்தை சிறப்பாக செலவிட்டு நல்ல லாபத்தையும், பலன்களையும் பெறுவார்கள். உங்களுடைய திறனை காட்டுவதற்கான சிறந்த நேரமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் பலனை முழுமையாக அனுபவிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான பேச்சுகள் தொடங்கும். சுப காரியங்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள். நீண்டகாலமாக வாங்க வேண்டும் என்று நினைத்த ஒரு பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே கவலைப்படுவதை நிறுத்துவது நல்லது. அடுத்த காரியத்தை நோக்கி சிந்திப்பது சிறப்பான பலன்களைத் தரும். சில பிரச்சனைகள் மற்றும் சவால்கள் உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். இருந்தாலும் நெருங்கிய நண்பர்களின் ஆலோசனை மற்றும் உதவியால் நிம்மதி அடைவீர்கள். சொத்துகள், நிலம், கட்டடம் தொடர்பான குடும்பத் தகராறு இருந்தால் அதனை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் செய்பவர்கள் பணம் சார்ந்த விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. காதலிப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம்.












Click it and Unblock the Notifications