தனுசு முதல் மீனம் வரை.. அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்.. இதுல மட்டும் எச்சரிக்கையா இருங்க
வார ராசி பலன்: பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு: இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றியைத் தரும் வாரமாக இருக்கும். உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முயற்சிப்பது நல்லது. வியாபாரம், தொழிலில் ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவுகளால் இப்போது லாபத்தைக் காண்பீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த பயணங்கள் லாபத்தை தரும். அரசு தொடர்புடையவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுவோருக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல விதமான பலன்கள் கிடைக்கும். மனதில் ஏற்பட்டு வந்த அனைத்து குழப்பங்களும் நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகளால் கவலை ஏற்படும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தேவையற்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எதிரிகளால் பிரச்சனைகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். காதலில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதால் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் மகிழ்ச்சி சோகம் என இரண்டும் இருக்கும். உங்களுடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் காலமாக இருக்கும். எதிரிகளால் குழப்பம் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலைகளில் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்வார்ரகள். உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. பருவகால நோய்களால் பாதிக்கப்படுவதற்கான சூழல் உள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எடுக்கும் முடிவுகளை நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி கிடைக்கும். திருமண வாழ்வில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான காலமாக இருக்கும்.
மீனம்: அதிர்ஷ்டத்தை அனுபவகிக்கும் வாரமாக மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இருக்கும். உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி பெருகும். அரசு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications