துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு ஜாக்பாட்.. யோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?
Weekly rasi palan: 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை மாசி மாதம் 12 ஆம் நாள் முதல் மாசி 18 வரை துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன விதமான நற்பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாரத்தில் மிக முக்கிய தினமான மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானுக்குரிய தினமான மகா சிவாரத்திரி தினத்தன்று ஒரு கால பூஜையிலாவது அமர்ந்து மனதார வழிபடுவதால் ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும். பழங்கள், மலர்கள், வில்வ இலை, தாமரை என தங்களால் முடிந்தவற்றை சிவனுக்கு சாற்றி வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும்.

துலாம்: துலாம் ராசிக்கு விஷ்ணு, கிருஷ்ணர், பெருமாள் வழிபாடு அதி அற்புதமான பலன்களைத் தரும். கால், சளி, தோல் பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளுடன் கோப தாபம் கூடாது. அவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. சுப விரைய பிராப்தம் உண்டாகும். அசையும், அசையா பொருள்களை சேர்ப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். துணை விஷயத்தில் ஏற்றம் உண்டாகும்.
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உள்ளூர், வெளியூர், கடல் தாண்டிய பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அன்னதானம் கொடுப்பது நல்லது. தனம், குடும்பம்,வாக்கு பெருகும். லாபம் பெருகும். வீடு, நிலம், நகை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சேமிப்புகளைத் தொடங்குவீர்கள். பணத்துக்கான சந்தோஷம் உண்டாகும். தொழில் விஷயங்களில் பதட்டமில்லாமல் இருப்பது ஏற்றத்தை தரும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு முருகர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் அனுகூலம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அனுகூலம் உண்டாகும். சுப காரிய தடைகள் நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஏற்றம் உண்டாகும். லாபம், சந்தோஷம், ஏற்றம் உண்டாகும். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். வீடு, நிலம் விற்க முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும்.
மன அழுத்தம் உண்டாகும். பல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. ரத்த பந்த உறவுகளுடன் சண்டை சச்சரவுகள் வேண்டாம். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் பெறுவீர்கள். துணை அல்லது துணைவியார் விஷயத்தில் வாக்கு வாதம் வேண்டாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு தைரியம், ஏற்றம், அனுகூலம், தெய்வமார்க்க சிந்தனைகள் உண்டாகும். ராகவேந்திரர் வழிபாடு உண்டாகும். யோகத்தையும், சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் பெறுவீர்கள். உத்தியோகம், வேலை, தொழில் தொடர்பான பயணங்கள் உண்டாகும். பதவி உயர்வில் தடை ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
தொழில் ரீதியான ஏற்றம் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் வரும். அசையும் அசையா சொத்துகள் சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களுக்கு அனுகூலம் ஏற்படும். உறவில் ஏற்றம் உண்டாகும். ஆத்ம ரீதியாக அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications