மிதுன ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் சூப்பர் மாற்றம்.. புது வீடு, புது கார் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூலை 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுன வார ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள், கணவன், மனைவி, பெற்றோரின் விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப விஷயங்கள் அனைத்தும் நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிவர்த்தியாகும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பயணங்களால் ஏற்றம்
உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் வந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதன் மூலம் நல்ல ஆதாயமும், முன்னேற்றமும் உண்டாகும். கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் வந்தால் செய்து கொள்ளலாம். தாய் வழி, தந்தை வழி உறவுளிடம் தர்க்கம், வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டால் பெரிய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தடைகள் நீங்கும்
வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள், தடைகள் அனைத்தும் நீங்கும். நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்புள்ளதால் கொஞ்ச காலம் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர்களின் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்படுவது, ஆவேசப்படுவது, முதலீடுகள் செய்வது, வேலையை ராஜினாமா செய்வது, ஒரு விஷயத்தை ஆராய்ந்து பார்க்காமல் முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
புதிய வரவுகள்
குடும்பத்தில் புதிய வரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முன்னேற்றம், வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடு
ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது அனைத்து விதமான விஷயங்களிலும் அற்புதமான முன்னேற்றத்தை தரும். அனுமன் சாலிஷா கேட்பது நன்மை பயக்கும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு மேன்மையை ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications