சிம்ம ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. வீடு தேடி வரும் வம்பு.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூலை 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம் வார ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்கள் அதிக அளவிலான யோக பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஏற்றமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் பிறர் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும்.
ஆரோக்கியம்
நரம்பு, முதுகுவலி, பாதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்களாகவே உங்களைப் புலம்ப வைக்கும் வகையில் மாற்றிக் கொள்வீர்கள். நேசிப்பவர்களை காயப்படுத்த வேண்டுமா என்று யோசித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எல்லாம் உங்களுக்கு எதிராக மாறும் காலகட்டம்.
பணவரவு
உங்களை நேசித்தவர்களை காயப்படுத்தியதற்கான எதிர்வினையை சந்திக்கும் காலகட்டமாக இருக்கும். முதலீடுகளுக்கோ, பண வரவுக்கோ எந்த ஒரு குறையும் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் உடனடியாக எடுக்காத முடிவுகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெற்றோர், பெரியோருக்கு உறுதுணையாக இருப்பது நல்லது. அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும்.
விட்டுக் கொடுத்து செல்வது நல்லது
நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும். லாபமும், சந்தோஷமும் ஏற்படுவது உங்கள் கையில்தான் உள்ளது. கொஞ்சம் இறங்கிப் போக வேண்டும். இல்லையெனில் சிக்கலை சந்திக்க நேரிடும். மருத்துவர்கள், தொழிலதிபர்கள், மீடியா துறையில் இருப்பவர்கள் பெரிய பெயர், புகழைப் பெறுவீர்கள்.
தொழில்
பழைய தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்படும். பழைய தொழிலால் பிரச்சனைகள், கஷ்டங்கள், விரக்தி ஏற்படும். மற்றவர்கள் செய்த பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பழைய தொழில் கை கொடுக்காது என்பதால் புதிய தொழில் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
வழிபாடு
எல்லா விதத்திலும் நன்மைகளைப் பெற நரசிம்மர் வழிபாடு செய்வது நல்லது. நரசிம்மர் கவசத்தை படிப்பது நல்லது. ஏற்றமும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும்
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications