மேஷம் முதல் கன்னி வரை.. இந்த 6 ராசிகளில் அதிர்ஷ்டம் அள்ளப்போவது யார்?.. இந்த வார பலன்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 5 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-mesham-kanni-zodiac-signs-set-for-major-changes-from-sep-22-to-27

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 5 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு அற்புதமாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். முதலீடுகள் செய்யும் அமைப்பு உள்ளது. தொழிலில் படிப்படியாகத் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் துணை, பிள்ளைகள் என்ன சொன்னாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.

அரசுத் துறை, அரசியல்வாதிகள் பெரிய பொறுப்புகளுக்கு வருவார்கள். கெளரவம் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யோகமும், நம்பிக்கையும் ஏற்படக்கூடிய காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தெய்வ தரிசனங்களை செய்யும் அமைந்துள்ளது. சிறு சிறு மனக் குழப்பங்கள், டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்களில் தடைகள் ஏற்பட்டு நடக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வயிறு பாதிப்புகள், பின்பகுதியில் வலிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ராசியாதிபதி நீச்சமாவதால் அம்மா வழி சொந்தங்கள், உறவினர்கள் மூலம் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. திருந்செந்தூர் முருகன் வழிபாடு சகலவித நன்மைகளையும் தரும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மிக முக்கியமான காலகட்டம். கோர்ட், கேஸ், அலவலகத்தில் இருக்கும் பிரச்சனைகள், மாற்றங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லா நல்லவித முன்னேற்றங்களும் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயித்துக் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்குள் இடையூறுகள், டென்ஷன்கள் வரும் வாய்ப்புள்ளது. இளைய சகோதரன், சகோதரிகளுக்கு இடையே பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

செவ்வாய், குரு இணைவதால் ராஜ உறுப்புகளான இதயம், மூளை தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும். வீட்டை விட்டு, ஊரை விட்டு வேலை உள்ளிட்ட காரணங்களால் பிரிந்திருப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டக்கூடிய காலகட்டம்.

எல்லா விதத்திலும் யோகம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மை தரும். குடும்பத்தில் துணையுடன் மனம் விட்டுப் பேசுவது, இணக்கமாகச் செல்வது நல்லது. பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுன ராசி பலன்

மிதுன ராசி, லக்கினம் சார்ந்த நபர்கள் பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் நீச்சமாக இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட ஆவணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் தீரும். பெரும் செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் எந்தவித மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. யோசித்துக் கொண்டே இருக்காமல் செயலில் இறங்குவது நன்மையைத் தரும்.

தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். எந்த விஷயத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பற்கள் சார்ந்த பாதிப்புகள் வரும். வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரச்சனைகள் வரும். வேலைகளில் அலைச்சல் ஏற்படும். குடும்பத்திற்குள் திடீர் பயணங்கள், சுபவிரயங்கள் ஏற்படும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முக்கியமான காலகட்டமாக இருக்கும். ராசியில் இருக்கும் செவ்வாய், குரு அரசியல் யோகத்தைக் கொடுப்பார். சொந்த வீடு யோகம் உண்டாகும். கிரஹப் பிரவேசம் செய்வீர்கள். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அயல்நாடுகளில் முதலீடுகளைச் செய்யும் அமைப்பு உள்ளது. வெளியூரில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வண்டி, வாகனத்தில் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கழுத்து, தொண்டை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வந்து செல்லும். நீச்சம் பெறக்கூடிய செவ்வாயாக இருப்பதால் அடைப்பு போன்றவை கண்டறிவதற்கான வாய்ப்பு ஏற்படும். வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். திருமண யோகம் ஏற்படும்.

பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக சில வாக்குவாதங்கள் ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அனுகூலங்களும் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உறவுக்குள் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். துணை மற்றும் காதல் அமைப்பில் சந்தோஷம் ஏற்படும். எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் நடைபெறும். இழுபறியாக சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம்.

தலைவலி, பாத வலி, முட்டி வலிகளில் மிகுந்த கவனம் தேவை. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். மனதிற்குப் பிடித்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தைப் பிரிந்து தொலைதூரப் பயணங்கள், உள்ளூர் பயணங்கள், வெளியூர் பயணங்கள் யோக பலத்தை பெற்றுத் தரும். பண வரவு, ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

விரயத்தில் இருக்கும் செவ்வாய், குரு, நல்ல பலமான இடத்தில் அமர்ந்திருக்கிறது. ஞானம் கொட்டக்கூடிய காலகட்டம். மனம் தெளிவடையும். புத்திசாலித்துடன் செயல்படுவீர்கள். எலக்ட்ரானிக் பொருள்களை வாங்கு மகிழ்வீர்கள். அஷ்டமத்தில் சனி, சந்திரன் சேர்ந்திருப்பதால் இரவு நேர பிரயாணம், வெளியூர் பயணம், வெளிநாடு பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் கவனமாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையைத் தரும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மையைத் தரும்.

கணவன், மனைவி இருவரும் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். தொழில், வியாபாரம், வேலை செய்யும், இடம், பயணம், அக்கம்பக்கத்தினர் என யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். சூரியன் ராசியில் இருப்பது, சனியின் பார்வையில் இருப்பது, சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பது, லக்கினத்தில் ராசியாதிபதி சேர்ந்திருப்பதால் கவனம் தேவை.

நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். பெரும் வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பெரும் வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். வண்டி, வாகனத்தில் கவனம் தேவை. வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+