மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரத்தில் வரும் குட்நியூஸ்.. முழு பலன்கள் விவரம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-mesham-to-meenam-will-see-money-career-growth-from-sep-29-to-oct-4

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசியினருக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இருப்பினும் அதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்கனவே இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு புதிய வேலைகளை எடுப்பது நல்லது. தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும்.

இழுபறியான விஷயங்களை விட்டுவிடாமல் அதனை செய்து முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நிமித்தமாக எந்த பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்ளலாம். மேஷ ராசி கணவர்கள் மனைவியிடம் இணக்கமாகச் செல்வது நல்லது. மேஷ ராசி மனைவி கணவரை நன்றாகப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

கழுத்துப் பகுதி, தூக்கமின்மையால் பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உங்களை நம்பி நிறைய பொறுப்புகள் வந்து சேரும். சனி 10க்கும், 11க்கும் உரியவர் என்பதால் நிறைய வேலைகள் கிடைக்கும். வயதானவர்களுக்கு ஏராளமான வெற்றிகள் ஏற்படும். குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா செல்வீர்கள். நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் அமைப்பு உள்ளது.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசியினருக்கு வரும் 30 ஆம் தேதி வரை நிறைய பணங்கள் வரும் அமைப்புள்ளது. பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உடல்நலம் மேம்படும். புதிய கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். வேலை மாறக்கூடிய வாய்ப்புள்ளது. இடமாற்றம் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

6 ஆம் இடத்தில் லட்சுமி நாரயண யோகம் ஏற்படுவதால் புதிய கார், வண்டி வாங்குவற்கான யோகம் உண்டாகும். படிப்பு அற்புதமாக இருக்கும். ஆடம்பரமான விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வாரத்தின் இறுதிப் பகுதியில் நிறைய பணவரவு ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது. உடல் சூடால் வரக்கூடிய பாதிப்பு, நரம்பு, வயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.

எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. லாபமும், சந்தோஷமும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். சுக்கிரன், புதன் பார்வை இருப்பதால் நண்பர்கள், மூத்தவர்கள் மூலமாக நன்மைகள் கிடைக்கும். பெரிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். வீடு, சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். மணப்பெண்ணாக மாறும் யோகம் ஏற்படும். காதல் கைகூடும். இந்த வாரத்தில் இருந்து 4 மாதங்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

மாற்றங்களும், ஏற்றங்களும் வரக்கூடிய மாதமாக இருக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும். தடைபடாமல் அனைத்து விஷயங்களும் நடக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். காதல் கைகூடும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் நோக்கி செல்லும் விஷயங்கள் கண்டிப்பாக கிடைக்கும். சுபவிரய பாக்கியம் உண்டு. உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியை படிப்பது, கேட்பது நன்மையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசியினர் வீட்டிற்குத் தேவையான இன்டீரியர் டெக்கரேஷன் செய்வது, சோஃபா வாங்குவது போன்ற ஆடம்பரமான விஷயங்களைச் செய்வீர்கள். திருமண யோகம் உண்டாகும். வீடு முழுக்க சொந்தபந்தங்கள் இருக்கும் அமைப்பு. வெளியூர் செல்லும் வாய்ப்புள்ளது. தோட்டங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். முயற்சிகள் தள்ளிப்போனாலும் நிச்சயம் வெற்றி பெறும்.

30 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக வேலை கிடைக்கும். வாரத்தின் இறுதிப் பகுதியில் சுப விரயம் உண்டாகும். வண்டி வாகனங்கள் மாற்றுவீர்கள். அல்லது வண்டி வாகனங்களுக்கு செலவு செய்வீர்கள். பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. முக்கியமான முடிவுகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக முடியும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்திற்கு தேவையான பணத்தை கொடுத்து மகிழ்வீர்கள். துணையிடம் கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் உடனிருப்பவர்கள், கூட்டாளிகள் சில பிரச்சனைகள் செய்யும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசியினர் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது பார்த்து இயக்குவது, வேகத்தைக் குறைப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் இருந்து இழுபறிகள் நீங்கும். பெரும் செல்வாக்கு ஏற்படும். இழுபறியாக இருந்த அமைப்பு படிப்படியாக மாறும்.

இந்த மாதத்தில் வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் வார்த்தைகளில் ஆக்ரோஷம், கோபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவம், மீடியா, கலை, ஏஐ துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். சனிக்கிழமைகளில் பெருமாள், தாயாரை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக எந்தவித பிரச்சனைகளிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.

உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வெளியூர், வெளிநாடு பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் பேசிக்கொண்டு ஜாலியாக இருப்பீர்கள். சுற்றுலா செய்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். கண் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினர் உறவுகள் விஷயத்தில், குடும்பத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துணை விஷயத்தில் ஆக்ரோஷம், கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களை அடுத்தடுத்து முடிப்பது நல்லது. பெரும் செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். நரம்பு, கண், நடுக்கம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். மேலதிகாரிகள் விஷயத்தில் தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். உங்கள் குடும்ப விஷயத்திலும், பிறர் குடும்ப விஷயத்திலும் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

மூத்தவர்களால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. கால்முட்டி, தூக்கமின்மை ஏற்படும். பெரியவர்கள், மூத்த மகனால் பிரச்சனைகள் வந்து சேரும். சைனஸ், மைகிரைன் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் பேரக் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டு. காதல் திருமணம் செய்து உங்கள் வீட்டிற்கு வருவார்கள். அரசியலில் வெற்றி வரும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+