அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 6 ராசிகள்.. பணமழை, பதவி உயர்வு.. உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.
அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
12 ராசிகளில் இந்த வாரத்தில் அமோகமான பலன்களை துலாம் ராசியினர் பெறப் போகின்றனர். பெரும் புகழ், பெயர், கெளரவம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். குடும்பத்துக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும். நிறைய பணங்கள் வந்து சேரும்.
மருத்துவதுக்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு, மருத்துவக் கல்வி பயில நினைப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் குரு வருவதால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். மன சந்தோஷங்கள் அதிகரிக்கும். ஆடம்பரமான விஷயங்களை அதிகமாக செய்வீர்கள்.
27, 28, 30, 31 ஆகிய தினங்கள் உங்களுக்கு நல்ல அமைப்பைத் தரும். மேலதிகாரிகள், உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். லாபத்தின் அளவு பன்மடங்காக உயரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என்று மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். லாபத்தின் அளவு பன்மடங்காக அதிகரிக்கும். பெரும் செல்வாக்கைப் பெறக்கூடிய காலகட்டம். வயிறு, அசிடிட்டி, ஜீரணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய நல்ல காலகட்டம். நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். குரு 10 ஆம் இடத்துக்கு வருவதால் இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும்.
வழக்குகள் சாதகமாக முடியும். வழக்கறிஞர், நீதிபதிகளை சந்திக்கும் அமைப்பு ஏற்படும். வேறு ஊரில் வீடு கட்டுவது, நாட்டில் வீடு கட்டுவது போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை மாறுவதில் ஆர்வம் அதிகளவில் இருக்கும். 29, 30 ஆகிய நாட்கள் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. செலவுகள் மற்றும் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் பழைய பஞ்சாயத்துகள், பழைய பிரச்சனை, நண்பர்கள், வழக்குகள் என எல்லா பழைய பிரச்சனைகளும் தீரும். கடன்களை அடைத்து முடிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய லோன்கள் கிடைக்கும். நண்பர்கள் உங்களிடம் நெருங்கிய நட்பு பாராட்டுவார்கள்.
நிறைய பேருக்கு பெரும் பொறுப்புகள் ஏற்படும். சிலருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு ஒரு பெரும் அதிகாரியால் நல்லது நடக்கும். நிறைய பரிசுப் பொருள்கள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எந்த விஷயத்துக்கு முயற்சி செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். சந்தோஷமான பலன்களை அதிகமாக கொடுக்கக்கூடிய காலகட்டம்.
தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. தொடை, கால், முட்டி, பாதங்கள் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
மகர ராசி பலன்
மகர ராசியினருக்கு இந்த வாரத்தில் இருந்து அடுத்த 4 மாதங்களுக்கு சிவன் கோயிலுக்கு நெய் தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். காப்பர் பொருள்களை உண்டியலில் காணிக்கையாக போடுவது நன்மை பயக்கும். அஷ்டமத்தில் குரு போவதால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அன்னதானத்துக்கு உதவி செய்வது, அன்னாபிஷேகம் செய்வது ஆரோக்கியத்தில நன்மை பயக்கும்.
மகர ராசி கணவராக இருந்தால் மனைவியின் உறவிலும், மனைவியாக இருப்பின் கணவரின் உறவில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. கழிவுப் பாதை, அடிவயிறு, நரம்புகள், பின்பகுதியில் வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வேலை நிமித்தமான எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழில், வேலை, அந்தஸ்து, உத்தியோக, வியாபாரத்தில் பெரும் வளர்ச்சி காணக்ககூடிய காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. பண வரவு நன்றாக இருக்கும். நேர்மறையான காலகட்டமாக இருக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசியினர் பல பிரச்சனைகளில் இருந்தும், பாதிப்புகளில் இருந்தும் விடுதலை பெறுவீர்கள். அடுத்த 4 மாதம் பிரம்மாண்டமான மாற்றத்தைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மனம் தெளிவடையும், குழப்பமாக இருந்த மனநிலை மாறும். தெளிவாகவும், நேர்மறையாகவும் சிந்திக்கக்கூடிய தன்மை ஏற்படும்.
மற்றவர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். கடந்த ஆண்டில் பட்ட கஷ்டங்களில் இருந்தெல்லாம் இப்போது விடைபெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு குழி பறித்த நிலைமை எல்லாம் மாறும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். வரும் 4 மாதங்கள் உங்களுக்கு நேர்மறையாக இருக்கும்.
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்ட காரியங்கள் ஜெயிக்கும் யோகம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமண யோகம் உண்டாகும். வீடு விற்பது, வாங்குவதற்கான அற்புதமான யோகம் ஏற்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் அந்நியோன்யக் குறைபாடில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மீன ராசி பலன்
மீன ராசியினர் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கழிவுப் பாதை தொடர்பான சிறிய பாதிப்புகளில் கூட உரிய மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. அஷ்டமத்தில் சூரியன் இருப்பதால் சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகள், உத்தியோகம், தொழில் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஜென்மசனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். வாகனங்கள் தொர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த மன தாங்கல்கள் நீங்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம்.
தினந்தோறும் கோளார் பதிகம் கேட்பது சகலவித முன்னேற்றங்களையும் தரும். திடீர் அதிர்ஷ்ம், திடீர் லாட்டரி, பதவி உயர்வு, சம்பள உயர்வு, வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது போன்ற அற்புதமான யோகங்களைப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். எதிரிகளை அசாரதாரணமாக எடை போடுவதைத் தவிர்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications
