துலாம் முதல் மீனம் வரை.. 6 ராசிக்கு குட் டைம் ஆரம்பம்.. அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எது
Rasi palan this week: செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு நட்பு வட்டாரங்கள் விரிவடையும். நண்பர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பொறுப்புகள், அழகு அதிகரிக்கும். வீட்டில் மருந்து, மாத்திரை செலவு, மருத்துவமனை செலவு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலை, தொழில், வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும்.
அழகான நிறைய விஷயங்களை பார்ப்பீர்கள். வருமானத்திற்கான வழிகளை சரியாகக் கண்டறிவீர்கள். செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நிறைய நல்ல விஷயங்கள் முடியும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். உறவுகளுக்குள் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இயற்கையாக இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். விரயங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்கள் உதவி தேவைப்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு எதிரிகள் சிறிது பலமாக இருக்கக்கூடிய காலகட்டம் என்பதால் கொஞ்சம் இணக்கமாகச் செல்வது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். உறவுக்குள் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நிமித்தமாக எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.
பெரும் செல்வாக்கு ஏற்படும். நிறைய விஷயங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல லாபங்கள் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்குச் செல்வீர்கள்.
வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பெரிய பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய விஷயங்கள் எல்லாமே நடக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனை ஜெயிக்கும் வரை கைவிட மாட்டீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். செவ்வாய், குரு இணைந்துள்ளதால் பூர்வீக சொத்துகளை இடித்துக் கட்டுவது, கோயில் கட்டுவது, நிலத்தை விற்றுவிட்டு புதிய கட்டடம் கட்டுவது போன்ற அமைப்பு உண்டாகும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு லாபம் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். பண வரவு அற்புதமாக இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நம்பிக்கையான விஷயங்கள் நடக்கும். அலுவலகம் ரீதியான பிரச்சனைகள், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. நண்பர்களால் பெரிய அளவில் சந்தோஷம், ஆதாயம் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குருவும் இணைந்திருப்பதால் பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்மறையான எந்தவொரு விஷயங்களும் நடைபெறாது. லாபத்தில் அற்புதமான கிரகங்கள் அமர்ந்திருப்பதால் பணம் வந்து கொண்டே இருக்கும். பரிசுகள் வந்து சேரும். பதவி உயர்வு, சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய அமைப்பு. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. பிள்ளைகளின் சுபச் செலவுகளுக்கான பணங்கள் வந்து சேரும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வசந்தங்கள் வரக்கூடிய அமைப்பு. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்களும் ஏற்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசியினருக்கு இந்த வாரத்தில் நிலம் அமையும் வாய்ப்புள்ளது. தைரியம் பிறக்கும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொழிலில் எடுக்கக்கூடிய முடிவுகளில் சாதிக்கும் அமைப்பு உள்ளது. தொழிலில் நல்ல மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
எந்தவொரு வழக்குகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கொழுப்பு தொடர்பாந பாதிப்புகளில் கவனம் தேவை. வேலையில் பெரிய மாற்றம், முக்கியமான விஷயங்கள் சாதகமாக நடக்கும். பொறுப்புகள் கூடும். நல்ல வேலை கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திங்கள்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் குடும்ப விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. ஏழைகளுக்கு உணவு தானம் கொடுப்பது நன்மையையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். எல்லா விஷயங்களிலும் அனுகூலமும் ஏற்படும். கணவர் மனைவியின் உடல் நலனிலும், மனைவி கணவரின் உடல்நிலையிலும் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசியினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் இருக்கின்றனர். நட்பு வட்டாரங்கள் மூலம் சந்தோஷம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். புதிய இடங்களுக்குச் செல்லும் அமைப்பு. சந்தோஷமாக இருப்பீர்கள். பொறுப்புகள் கூடக்கூடிய காலகட்டம். எல்லா விஷயங்களும் தடையில்லாம் நடக்கும் அமைப்பு.
வேலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம், செலவு, கடனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களால் மிகுந்த பிரஷர் உண்டாகும். ஆனால், 3 ஆம் இடம் நன்றாக இருப்பதால் மன தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரன், சகோதரிகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் அமர்ந்திருப்பது பண வரவு அற்புதமாக இருக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள்.
திருமண யோகமும், மறுமண யோகமும் நிறைய பேருக்கு ஏற்படும். வீடு, நிலம் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. கோபத்தைக் கட்டுப்படுத்துவது ஏற்றத்தை ஏற்படுத்தும். எல்லா விஷயங்களையும் பெரிதாக சிந்திப்பீர்கள். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல சாதகமான அமைப்பு காணப்படும். தேவையில்லாதவர்களை பகைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
மீனம் ராசி பலன்
மீன ராசியினருக்கு மிகவும் கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். இந்த வாரத்தில் உங்களுக்கு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. தொழில் செய்பவர்கள், கட்டுமானத் துறையில் இருப்பவர்கள், சர்ஜிக்கல், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். பஞ்சம ஸ்தானம் வலுவில்லாமல் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.
சனி வக்கிரமாக இருப்பதால் ஒரே விஷயத்தை இரண்டு, மூன்று முறை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தள்ளிப்போய் சில விஷயங்கள் நடக்கும். அஷ்டமத்தில் புதன், சுக்கிரன் இருப்பதால் கிம்பளம் சார்ந்த பணங்கள் வந்து சேரும். ஆசைப்பட்ட சில விஷயங்கள் இப்போது நடக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவுகளுக்குள் இருந்த சிக்கல் தீரும். கழிவுப் பாதை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி மிகுந்த அவசியம்.
ஆரோக்கியத்தில் ரத்த சர்க்கரை, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. நிம்மதியற்ற நிலைமைகளில் இருந்து நிம்மதியான நிலைமைகளுக்குச் செல்வீர்கள். அதிகமான பொறுப்புகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. புதிய விஷயங்களால் நிறைய நன்மைகள் நடக்கும்.


Click it and Unblock the Notifications
