மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்கு 7 நாட்களில் ஜாக்பாட்.. தலைக்கு மேல் கத்தியும் இருக்கு.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான (ஜூன் 9 முதல் 15) பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஏதாவதொரு தெய்வ வழிபாட்டிற்கு செல்வது நல்லது. அந்த நாளில் மதிய வேளையில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் பசு மாட்டிற்கு தானமாக கொடுப்பது நல்ல பலன்கள் கிடைக்கும். அனைத்து விதமான விஷயங்களும் உங்களுக்கு இந்த மாதத்தில் நன்மையை ஏற்படுத்தும். அலைச்சல் அதிகரித்தாலும் நிறைய காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
வேலை, உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் வெற்றி அடைவீர்கள். நடக்கும்போது, உடற்பயிற்சி செய்யும்போது, படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது சுழுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. மனதை இதமாக வைத்துக் கொள்வது நல்லது. அற்புதமான மாதமாகவும், ஏற்றத்தை தரும் மாதமாகவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் தெய்வ வழிபாட்டிற்குச் சென்று வருவது நல்லது. பசு மாட்டிற்கு உணவளிப்பது, சாப்பாடு தானம் கொடுப்பது நல்லது. வார்த்தையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஒற்றை தலை வலி, காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பழைய கடன்கள், ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும். மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. வேலை மாற்றம், உத்தியோக மாற்றம், படிப்பு, வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் உண்டாகும். வார்த்தையைக் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய மாதம் இந்த ஆனி மாதம். உங்களுடைய ராசிக்குத்தான் சூரியன் வருகிறார். ஏற்கனவே அங்கு குரு அமர்ந்திருக்கிறார். உத்தியோகம், படிப்பு, தொழில், வேலை, வியாபாரம், தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட உபத்திரவம், இதயம் சார்ந்த பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது.
வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள், சட்டத்திற்குப் புறம்பானவர்கள் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் வழக்கு, அபராதங்களில் சிக்கும் வாய்ப்புள்ளது. கூடா நட்பால் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ள மாதமாக இருக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் துணை, பெற்றோர், பெரியோர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு செயல்படுவது நல்லது. உங்கள் மேல் அக்கறை கொண்டவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது. ஆனி, ஆடி மாதங்களில் கோபப்பட்டால் கண்டிப்பாக காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கண், வாய், காதை மூடிக் கொண்டிருப்பது நல்லது. வியாழக்கிழமைதோறும் ஏதேனும் கடவுள் வழிபாட்டைச் செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications