தனுசு ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது.. வெளியாட்களிடம் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு வார ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களின் துணை பயணம் செய்ய நேரிட்டால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. அவர்களுடைய பயணத்தை தடுப்பது, கோபப்படுவது, மற்றவர்கள் முன்பு விட்டுக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குடும்பத்தில் நீங்கள் தலையிடுவதையும் தவிர்ப்பது நன்மையைத் தரும்.
வெற்றி மேல் வெற்றி
எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை, சந்தோஷம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். பயணங்களின்போது ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிக கவனமாக இருப்பது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அதன் மூலம் வாழ்க்கையில் ஆதாயமும், முன்னேற்றமும் பெறுவீர்கள்.
தடைகள் நீங்கும்
இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறி உங்களுடைய வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். எந்தவொரு காரியத்தை எடுத்துச் செய்தாலும் அதில் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தொழிலில் புதிய மாற்றங்களை தாராளமாக செய்யக்கூடிய நேரமாக இருக்கும்.
தொட்டது துலங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழிலைத் தொடங்குவீர்கள். படிப்பு விஷயத்தில் காணப்பட்டு வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் நேரம்.
வழிபாடு
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். வெளியாட்கள் விஷயத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவான் வழிபாடு ஏற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும். ஸ்ரீ ரங்கநாதர் வழிபாடு அனைத்து தடைகளையும் நீக்கி அற்புதத்தை ஏற்படுத்தும். ரங்கநாதர், கருடாழ்வாரை தரிசனம் செய்வது நல்லது. அனந்தபத்மநாபபுரம், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள் கோயில் தரிசனமும் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications